நிசான் டெரானோ எஸ்யூவியின் லிமிடேட் எடிசன் அறிமுகம் - முழு விபரம்

By Saravana

நிசான் டெரானோ எஸ்யூவியின் லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

டெரானோ க்ரூவ் எடிசன் என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய லிமிடேட் எடிசன் மாடலில் கூடுதல் அலங்கார அம்சங்களுடன் வந்துள்ளது. புதிய நிசான் டெரானோ க்ரூவ் எடிசனின் படங்கள், முக்கிய விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

விளம்பர தூதர்

விளம்பர தூதர்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தை இந்த புதிய லிமிடேட் எடிசன் மாடலை பிரபலப்படுத்துவதற்கான விளம்பர தூதராக நியமித்திருக்கிறது நிசான் நிறுவனம். மொத்தம் 250 நிசான் டெரானோ க்ரூவ் எடிசன் எஸ்யூவிகள் மட்டுமே விற்பனை செய்யப்படும்.

பனி விளக்கு அறை

பனி விளக்கு அறை

பனி விளக்கு அறை க்ரோம் பூச்சு பட்டையுடன் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.

 ஸ்கஃப் ப்ளேட்

ஸ்கஃப் ப்ளேட்

காருக்குள் நுழையும்போதே ஒரு உயர்தரமான உணர்வையும், அழகையும் தரும் வகையில், எல்இடி ஸ்கஃப் ப்ளேட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில், டெரானோ பிராண்டு கொண்டதாக இருக்கிறது.

பிரத்யேக மிதியடிகள்

பிரத்யேக மிதியடிகள்

டெரானோ க்ரூவ் எடிசனுக்கு பிராண்டு பெயர் பொறிக்கப்பட்ட பிரத்யேக மிதியடிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

க்ரோம் அலங்காரம்

க்ரோம் அலங்காரம்

பின்புற டெயில்கேட்டில் இருக்கும் டெரானோ க்ரோம் பேட்ஜ் வசீகரிக்கிறது.

 கருப்பு கூரை

கருப்பு கூரை

இந்த எஸ்யூவியின் கவர்ச்சிக்கு வலுசேர்க்கும் விதத்தில் இதன் கூரை கருப்பு வண்ண மேட் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கிறது. அத்துடன் ரூஃப் ரெயில்களும் இந்த எஸ்யூவியின் கம்பீரத்தை கூட்டுகிறது.

ஸ்பீக்கர் சிஸ்டம்

ஸ்பீக்கர் சிஸ்டம்

நிசான் டெரானோ க்ரூவ் எடிசனில் ராக்ஃபோர்டு ஃபாஸ்கேட் ஸ்பீக்கர் சிஸ்டம் வழங்கப்பட்டிருக்கிறது. இது துல்லியமான உயர்தரத்திலான இனிய இசையை வழங்கும்.

இங்கும் க்ரோம் ஃபினிஷ்

இங்கும் க்ரோம் ஃபினிஷ்

டெயில்லைட் க்ளஸ்ட்டரில் சிறிய க்ரோம் பட்டைகள் கொடுக்கப்பட்டிருப்பது கூடுதல் அழகை தருகிறது.

விலை

விலை

ரூ.11.45 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய நிசான் டெரானோ எஸ்யூவி மாடல் விற்பனைக்கு வர இருக்கிறது. சாதாரண எக்ஸ்எல் ஆப்ஷனல் வேரியண்ட்டை விட ரூ.30,000 கூடுதல் விலையில் வந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, May 14, 2015, 16:05 [IST]
English summary
Nissan India has launched its limited edition model of Terrano compact SUV. The Japanese manufacturer has christened this model as Terrano Groove. Only 250 Terrano Groove models will be up for grabs and Nissan has priced it at INR 11,45,123 ex-showroom, Delhi. They have also tied up with Bollywood actor Sushant Singh Rajput to promote their offering.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+