ஓலா டாக்சி நிறுவனத்தின் புதிய கார் ஷேரிங் ஆப் அறிமுகம்!

Posted By:

ஓலா நிறுவனம் ஓலாஷேர் என்ற புதிய பகிர்வு அடிப்படியிலான அப்ளிகேஷனை அறிமுகம் செய்துள்ளது.

சோஷியல் ரைட் ஷேரிங் ஆப் எனப்படும் இந்த ஆப் மூலம், ஒன்றிக்கு மேற்பட்டவர்கள் பயணச் செலவை பங்கிட்டு செல்ல முடியும்.

Ola Cab
 

இந்த நடைமுறை ஆங்கிலத்தில் கார்-பூலிங் என அழைக்கப்படுகிறது. ஓலா நிறுவனத்தின் வாகனத்தில் பயணிக்க விரும்பும் ஒரு பயணி, இந்த ஆப்பை நிறுவி கொண்டால், தங்களை போலவே தாங்கள் செல்லும் பாதையில் பயணிக்க விரும்புபவரையோ அல்லது விரும்புபவர்களையோ அடையாளம் காட்டும்.

அப்படி, அடையாளம் காட்டப்படும் பயணிகளில் இரண்டு பேர் முதல் மூன்று பேர் வரை ஒன்றாக ஒரு வாகனத்தில் பயணம் செய்யலாம்.

சந்தர்ப்பவசமாக, முன்பின் அறிமுகம் இல்லாத சகபயணிகளுடன் பயணிக்க விரும்பாதவர்களுக்கும், தனிமையை விரும்புபவர்களுக்கும் ஒரு மாற்று யோசனை உள்ளது. பயணிகள் தங்களுக்கு முன்பின் அறிமுகமான நன்பர்களுடன் அல்லது உறவினர்களுடன் அவரவரக்கு பிடித்த சமூக வட்டங்களை உருவாக்கி கொண்டு, அந்தந்த நட்பு-வட்டத்தில் உள்ளவர்களுடன் பயணிக்கலாம்.

இந்த ஓலாஷேர் ஆப் வசதி, பெங்களூர் உட்பட ஐந்து நகரங்களில் இன்னும் மூன்று மாத காலத்தில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வசதி குறைந்தபட்சமாக 50 ரூபாய் அறிமுக விலையில் இருந்து கிடைக்க உள்ளது.

இந்த ஆப் அறிமுகத்தின் மூலம், வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு லாபங்கள் கிடைக்கும் என ஓலாஷேர் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஈஷான் குப்தா தெரிவித்தார்.

இத்தகைய கார்-பூலிங் முறையை உபயோகப்படுத்துவதனால், செலவீனத்தை மிச்சப்படுத்தி, நமது பயணத்தை எளிமையாகவும், சொகுசு நிறைந்ததாகவும் மாற்றிக்கொள்ள முடியும்.

நாளுக்கு நாள் சாலைகளில் வாகனங்களில் போக்குவரத்து கூடிக்கொண்டே தான் இருக்கிறது. ஒவ்வொருவரும் அவரவர் வாகனத்தில் தனித்தனியாக செல்வதை விட, இப்படி சகபயணிகளை கண்டறிந்து ஒன்றாக சேர்ந்து பயணிப்பதன் மூலம், சாலைகளில் வாகனங்களின் போக்குவரத்து நெரிசல் குறைந்து, சுற்றுசூழல் மாசுபாடும் குறைகிறது.

மேலும், இந்த நடைமுறை மூலம் எரிபொருளின் உபயோகம் குறைந்து, நெடுநோக்கில் மாசு அளவுகளும் குறைந்து, நீடித்து நிலைக்கக்கூடிய போக்குவரத்து அமைப்பிற்கும் வழிவகுக்கிறது என்பது கூடுதல் சிறப்புமிக்க செய்தியாகும்.

English summary
Ola launched the social ride sharing app known as OlaShare in India. By using this new app, customers can share rides with up to 2 to 3 people.
Story first published: Friday, October 16, 2015, 8:35 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark