"பால்வாக்கர் மரணத்துக்கு அவரேதான் காரணம்!" - போர்ஷே பதில்!

By Saravana

ஹாலிவுட் நடிகர் பால்வாக்கர் விபத்தில் மரணமடைந்ததற்கு, அவரேதான் காரணம் என்று போர்ஷே நிறுவனம் கூறியிருக்கிறது.

காரில் போதிய பாதுகாப்பு வசதிகள் கொடுக்கப்படாததே, தனது தந்தை மரணமடைந்ததற்கு காரணம் என்று பால்வாக்கர் மகள் வைத்த குற்றச்சாட்டுக்கு, போர்ஷே நிறுவனம் இவ்வாறு பதிலளித்துள்ளது.

 பால்வாக்கர் மரணம்

பால்வாக்கர் மரணம்

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் சினிமா மூலமாக உலக அளவில் பிரபலமான நடிகர் பால்வாக்கர் கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் 30ந் தேதி நடந்த கோர கார் விபத்தில் மரணமடைந்தார். அவர் சென்ற 2005ம் ஆண்டு மாடல் போர்ஷே கரீரா ஜிடி அதிசக்வாய்ந்த கார் மாடல்களில் ஒன்று. அந்த காரை பால்வாக்கரின் நெருங்கிய நண்பர் அதிவேகத்தில் ஓட்டியபோதுதான் விபத்தில் சிக்கியது. இந்த நிலையில், அவர் சென்ற போர்ஷே கார் குறித்தும், அவரது மரணம் குறித்தும் விவகாரங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

போர்ஷே மீது வழக்கு

போர்ஷே மீது வழக்கு

தனது தந்தை சென்ற போர்ஷே கரீரா ஜிடி காரில் போதிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லாததே அவரது மரணத்துக்கு காரணம் என்று கூறி போர்ஷே நிறுவனம் மீது அவரது மகள் மீடோ பால்வாக்கர்[16] சில மாதங்களுக்கு முன் வழக்குத் தொடர்ந்தார்.

பாதுகாப்பு இல்லாத கார்

பாதுகாப்பு இல்லாத கார்

போர்ஷே கரீரா ஜிடி கார் போதிய நிலைத்தன்மையில்லாமல், அடிக்கடி விபத்தில் சிக்கிய மாடல். அந்த காரில் அதிக நிலைத்தன்மையை வழங்கக்கூடிய ஸ்டெபிளிட்டி புரொகிராம் என்ற தொழில்நுட்பம் கொடுக்கப்படவில்லை. மேலும், குறைபாடுடைய சீட் பெல்ட் இருக்கிறது. இதுபோன்ற, அதிவேக கார்களில் பாதுகாப்பு குறைபாடு இருந்ததே தனது தந்தை மரணமடைந்ததற்கு காரணம் என்று பால்வாக்கர் மகள் மீடோ பால்வாக்கர் குற்றச்சாட்டியிருந்தார்.

போர்ஷே மறுப்பு

போர்ஷே மறுப்பு

பால்வாக்கரின் மகள் தெரிவித்த குற்றச்சாட்டுகளை போர்ஷே நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. பால்வாக்கர் மரணத்துக்கு அவரேதான் காரணம். நகரச்சாலைகளில் காரை அதிவேகமாக செலுத்தக்கூடாது என்று தெரிந்தும் அவர் தனது நண்பரை காரை அதிவேகமாக செலுத்த விட்டது தவறு. மேலும், அதிவேகத்தில் செல்லும்போது, விபத்து ஏற்படும் வாய்ப்பையும் அவர் உணராதவர் அல்ல என்றும் கூறியிருக்கிறது.

பராமரிப்பு இல்லை

பராமரிப்பு இல்லை

விபத்து முடிந்து நடத்தப்பட்ட ஆய்வுகளில் பால்வாக்கர் பயணித்த அந்த போர்ஷே காரில் 9 ஆண்டுகள் பழமையான டயர்கள் பொருத்தப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும், அந்த காரை முறையாக பராமரிக்கவில்லை என்பதோடு, முறையற்ற வகையில் பயன்படுத்தியதே விபத்துக்கு காரணம் என்று போர்ஷே கூறியிருக்கிறது. ஆனால், காரில் போதிய பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் கொடுக்கப்படவில்லை என்பதே மீடோ பால்வாக்கரின் குற்றச்சாட்டு என்பது குறி்ப்பிடத்தக்கது.

இதர தொடர்புடைய செய்திகள்

இதர தொடர்புடைய செய்திகள்

01. பால்வாக்கர் மரணத்துக்கு என்ன காரணம்?

02. மரணம் பற்றி பால்வாக்கர் கூறிய வார்த்தைகள்

03. ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் - 7 முழுவதும் பால்வாக்கர்

More from DriveSpark

Article Published On: Tuesday, November 17, 2015, 18:18 [IST]
English summary
Paul Walker Was Responsible For His Own Death' Says Porsche.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+