பெட்ரோல், டீசல் விலை மேலும் குறைந்தது; கார், பைக் பயன்படுத்துவோர் மகிழ்ச்சி
கச்சா எண்ணெய் விலை மேலும் சரிந்துள்ளதையடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 2. 42 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 2.25 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து மாதத்தில் இருமுறை பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி வருகின்றன.

இந்தநிலையில், கச்சா எண்ணெய் விலை மேலும் சரிந்துள்ளதையடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 2. 42 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 2.25 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைந்து வருவதால், கார், பைக் பயன்படுத்துவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். புதிய கார் மற்றும் பைக்குகள் விற்பனையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








