பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 காசுகள் குறைப்பு... டீசல் விலையில் மாற்றம் இல்லை!

பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 காசுகள் குறைக்கப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. இன்று நள்ளிரவு முதல் விலை மாற்றம் அமலுக்கு வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் இந்திய ரூபாயின் பண மாற்று மதிப்பை பொறுத்து, பெட்ரோல், டீசல் விலைகள் 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

பெட்ரோல் விலை

அந்த வகையில், கடந்த 15 நாட்களுக்கு முன் டீசல் விலை உயர்த்தப்பட்டது. பெட்ரோல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. இந்த நிலையில், இன்று எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலை குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றன.

அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 காசுகள் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நள்ளிரவு முதல் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.60.70 என்ற புதிய விலையில் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேநேரத்தில், டீசல் விலையில் மாற்றம் இல்லாததால், பழைய விலையே தொடரும். பெட்ரோல் விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

Most Read Articles
English summary
Oil marketing companies (OMC) have slashed petrol price by Rs 0.5 per litre from midnight of October 31. Post cut, price of Petrol in Delhi will be Rs 60.70/litre. However, diesel rate has been left untouched.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X