டிரைவர் துணையில்லாமல் 580 கிமீ தூரம் பயணித்து பீஜோ- சிட்ரோவன் தானியங்கி கார் சாதனை!

டிரைவர் துணையில்லாமல் இயங்கும் தானியங்கி கார் தயாரிப்பு கோதாவில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பீஜோ சிட்ரோவன் குழுமம் இறங்கியிருக்கிறது.

கடந்த வார இறுதியில், அந்த நிறுவனம் உருவாக்கியிருக்கும் 4 தானியங்கி கார்கள் 580 கிமீ தூரத்தை டிரைவர் துணையில்லாமல் கடந்து சாதனை புரிந்திருக்கின்றன.

நுண்ணறிவு தொழில்நுட்ப போக்குவரத்து மாநாடு

நுண்ணறிவு தொழில்நுட்ப போக்குவரத்து மாநாடு

பாதுகாப்பான பயணம் மற்றும் நவீன தொழில்நுட்பத்தில் போக்குவரத்து துறையை கொண்டு செல்வதற்கான மாநாட்டில் காட்சி படுத்துவதற்காக இந்த கார்கள் கொண்டு செல்லப்பட்டன. மேலும், தங்களின் தானியங்கி கார் தொழில்நுட்பத்தை உலகுக்கு பரைசாற்றவும் இந்த சாதனை பயணத்திற்கு பீஜோ சிட்ரோவன் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

சாதனை பயணம்

சாதனை பயணம்

பாரிஸ் நகரில் இருந்து போர்டியாக்ஸ் வரையிலான 580 கிமீ தூரத்தை இந்த 4 தானியங்கி கார்களும் எந்த பிரச்னையும் இல்லாமல் கடந்தன. இந்த பயணத்தின்போது டிரைவர்களின் உதவி சிறிதும் இல்லாமல் கார்கள் சென்றதாக பீஜோ சிட்ரோவர் பெருமிதம் தெரிவித்துள்ளது.

சிறப்பு அனுமதி

சிறப்பு அனுமதி

இந்த கார்களை பாரிஸ்- போர்டியாக்ஸ் இடையிலான பொது பயன்பாட்டு நெடுஞ்சாலையில் பயன்படுத்துவதற்கு பீஜோ சிட்ரோவன் நிறுவனம் அந்நாட்டு அரசிடமிருந்து சிறப்பு அனுமதி பெற்றிருந்தது. மேலும், இந்த பயணத்தின் மூலமாக தானியங்கி கார் தயாரிப்பில் பிரான்ஸும் இடம்பெற்றிருக்கிறது.

அழகாக சென்றன...

அழகாக சென்றன...

பீஜோ சிட்ரோவன் நிறுவனத்தின் 4 கார்களும், அந்தந்த இடத்தின் போக்குவரத்து மற்றும் வாகன நடமாட்டத்தை உணர்ந்து வெகு அழகாக சென்றன.

சமிக்ஞைகள்

சமிக்ஞைகள்

அத்துடன், வழியில் இருக்கும் வேக வரம்பு பலகைகளை உணர்ந்து வேகத்தை தானாகவே மாற்றிக் கொண்டு சென்றன. அத்துடன், முன்னால் செல்லும் வாகனங்களை முந்துவது, தடம் மாறுவது என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டன.

கூடுதல் கார்கள்

கூடுதல் கார்கள்

அடுத்த ஆண்டு மேலும் 15 தானியங்கி கார்களை பொது பயன்பாட்டு சாலையில் வைத்து சோதனை செய்வதற்கு பீஜோ சிட்ரோவர் நிறுவனம் அந்நாட்டு அரசிடமிருந்து அனுமதி பெற்றிருக்கிறது. இந்த சோதனைகள் மூலமாக, தயாரிப்பு நிலைக்கு தானியங்கி கார்களை கொண்டு செல்வதற்கான வாய்ப்பு ஏற்படும்.

 வர்த்தக பயன்பாடு

வர்த்தக பயன்பாடு

வரும் 2020ம் ஆண்டில் வர்த்தக ரீதியில் தானியங்கி கார்களை அறிமுகம் செய்ய பீஜோ சிட்ரோவர் குழுமம் திட்டமிட்டு இருக்கிறது. அந்த இலக்கை நோக்கி வெகு விரைவாக தனது முயற்சிகளை செய்து வருகிறது பீஜோ சிட்ரோவர் குழுமம்.

Most Read Articles
English summary
Peugeot- Citroen self driving cars successfully made 580 KM trip.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X