காருக்கான புதிய காற்று சுத்திகரிப்பு சாதனம்: பிலிப்ஸ் அறிமுகம்!

Written By:

கார் பயணிகளுக்கு சுத்தமான காற்றை வழங்கும் புதிய சாதனத்தை பிலிப்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

பிலிப்ஸ் கோ-ப்யூர் என்ற பெயரில் விற்பனைக்கு வந்திருக்கும் இந்த புதிய சாதனம் இந்திய நிலைகளுக்கு ஏற்ப விசேஷ காற்று சுத்திகரிப்பு தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

பிலிப்ஸ் ஃபில்டர்
 

சிகரெட் புகை உள்பட காற்றில் இருக்கும் நச்சுத்தன்மை மற்றும் தீங்கு தரும் நுண்ணுயிரிகளை முழுவதுமாக வடிகட்டி, தூய காற்றை இந்த சுத்திகரிப்பு சாதனம் காருக்குள் வழங்கும். அதிகபட்சம் 99 சதவீதம் வரை சுத்தப்படுத்தும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பயன்பாட்டை பொறுத்து ஆண்டுக்கு ஒருமுறை இந்த சாதனத்தில் உள்ள வடிகட்டியை மாற்ற வேண்டியிருக்கும். புதிய ஃபில்டர் போடுவதற்கு ரூ.1,500 வரை செலவாகும். புதிய ஃபில்டரை வாங்குவதும், மாற்றுவதும் மிக எளிது என்று பிலிப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிலிப்ஸ் ஃபில்டர் அறிமுகம்
 

இந்த புதிய சுத்திகரிப்பு சாதனத்தை ஆன்லைன் மூலமாகவும், வெளிச் சந்தையிலும் விற்பனைக்கு விட்டுள்ளதாக பிலிப்ஸ் தெரிவித்துள்ளது. விரைவில், கார் தயாரிப்பு நிறுவனங்கள் வழியாக விற்பனை செய்யும் திட்டமும் உள்ளதாக தெரிவித்துள்ளது.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நிலையில், ரூ.7,999 விலையில் இந்த புதிய காற்று சுத்திகரிப்பு சாதனத்தை பிலிப்ஸ் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. காற்று மிக அதிகமாக மாசுப்பட்டிருக்கும் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் இந்த காற்று சுத்திகரிப்பு சாதனம் அதிக வரவேற்பை பெறும் என்று பிலிப்ஸ் தெரிவிக்கிறது.

English summary
Philips has launched the all-new GoPure compact air purifier for vehicles. The in-car air purifier by Philips has been launched at a price of Rs. 7,999. Special filtration technology has been designed keeping in mind Indian conditions.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark