டெஸ்லா மின்சார கார் ஆலைக்கு பிரதமர் நரேந்திர மோடி விசிட்!

அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, டெஸ்லா எலக்ட்ரிக் கார் ஆலைக்கு சென்று பார்வையிட்டார்.

புதுப்பிக்கத்தக்க மற்றும் மாற்று எரிபொருளில் இயங்கும் வாகன திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி முக்கியத்துவம் அளித்து வருகிறார். இந்த நிலையில், நியூயார்க் நகரில் நடந்த ஐ.நா.சபையின் நிலையான வளர்ச்சி என்ற கருப்பொருளில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.

மோடி

இந்த கூட்டத்தை முடித்துக் கொண்டு, நியூயார்க்கிலிருந்து கலிஃபோர்னியாவில் உள்ள சான்- ஜோஸ் நகருக்கு அவர் வருகை தந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், அங்கிருந்து ஃப்ரீமாண்ட் பகுதியின் லா பவ்டாவில் அமைந்திருக்கும் டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மின்சார கார் தயாரிக்கும் ஆலைக்கு வருகை புரிந்தார்.

பிரதமர் மோடியை டெஸ்லா மோட்டார்ஸ் சிஇஓ., எலான் மஸ்க் வரவேற்றார். பின்னர், இருவரும் பேட்டரியில் இயங்கும் சிறிய வாகனத்தில், டெஸ்லா மோட்டார்ஸ் ஆலையில் மின்சார கார்கள் தயாரிக்கும் பிரிவுகளை சுற்றி பார்த்தனர்.

அப்போது, டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனம் உருவாக்கியிருக்கும், 'ஹோம் பேட்டரி'யின் தொழில்நுட்பம் குறித்த தகவல்களை ஆர்வத்துடன் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

டெஸ்லா மோட்டார்ஸ் சிஇஓ., எலான் மஸ்க்கை பிரதமர் மோடி சந்தித்திருப்பது இந்திய ஆட்டோமொபைல் துறையினர் கவனத்தை ஈர்த்திருப்பதோடு, பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

ஏனெனில், இந்தியாவில் டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனம் கால் பதிப்பதற்கான முயற்சிகளையும் ஏற்கனவே துவங்கியிருக்கிறது. இந்தநிலையில், அமெரிக்கா சென்றிருக்கும் பிரதமர் மோடி, டெஸ்லா மோட்டார்ஸ் ஆலைக்கு நேரடியாக சென்றதும், அதன் சிஇஓ., எலான் மஸ்க்கை சந்தித்திரு்பபதும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

அதிசிறந்த செயல்திறன், சொகுசு மற்றும் பாதுகாப்பு வசதிகளை கொண்ட உயர்வகை மின்சார கார்களை தயாரித்து உலகையே திரும்பி பார்க்க வைத்த நிறுவனம் டெஸ்லா மோட்டார்ஸ். தற்போது வளரும் நாடுகளுக்காக புதிய பட்ஜெட் மின்சார கார் மாடலை தயாரித்து வருகிறது.

இந்த புதிய மாடல்தான் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. கடந்த மாதம் அபுதாபியில் உள்ள மஸ்தார் சிட்டிக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு தண்டவாளத்தில் இயங்கும் ஓட்டுனர் இல்லா காரில் பயணித்தது நினைவுகூறத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Sunday, September 27, 2015, 11:25 [IST]
English summary
Prime Minister Narendra Modi on Saturday took a tour of Tesla Motors, the makers of trend-setting electric cars, in a battery-powered cart.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+