மேம்படுத்தப்பட்ட ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவி விற்பனைக்கு வந்தது - விபரம்!

Written By:

கூடுதல் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட புதிய ரேஞ்ச்ரோவர் எவோக் சொகுசு எஸ்யூவி இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலில் மட்டும் வந்திருக்கும் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் இந்த புதிய ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவியில் நிகழ்ந்திருக்கும் புதிய மாற்றங்கள் மற்றும் சேர்க்கப்பட்ட வசதிகள் குறித்த விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

வேரியண்ட்டுகள்

வேரியண்ட்டுகள்

வசதிகளுக்கு ஏற்ப பியூர், எஸ்இ, எச்எஸ்இ மற்றும் எச்எஸ்இ டைனமிக் என 4 விதமான வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும்.

தோற்றம்

தோற்றம்

மிக கவனமாக தோற்றத்தில் சில மாறுதல்களை செய்துள்ளனர். முகப்பு டிசைனில் முக்கியமாக பம்பர் மறுவடிவமைப்பு செய்யப்பட்டிருக்கிறது. பெரிய ஏர் இன்டேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, அடாப்டிவ் எல்இடி ஹெட்லைட் சிஸ்டம் இடம்பிடித்திருக்கிறது. எல்இடி பகல்நேர விளக்குளும் இடம்பெற்றிருக்கிறது. முகப்பு க்ரில் அமைப்பிலும் புதிய மாறுதல்களுடன் கம்பீரத்தை கூட்டிக் கொண்டிருக்கிறது. எல்இடி பிரேக் லைட் சிஸ்டம், புதிய டெயில்கேட் ஸ்பாய்லர் ஆகியவை முக்கிய மாற்றங்கள்.

கால் நகர்வை உணரும் நுட்பம்

கால் நகர்வை உணரும் நுட்பம்

பின்புற பம்பருக்கு கீழே பயணிகளின் கால்கள் நகர்வு தெரிந்தால், பின்புற கதவின் பூட்டு திறந்து கொள்ளும். இது புதிய வசதியாக சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், காரின் சாவி அருகில் இருந்தால் மட்டுமே இவ்வாறு திறக்கும் என்பதால், கவலைப்பட தேவையில்லை.

இன்டிரியர்

இன்டிரியர்

இன்டிரியரும் குறிப்பிடத்தக்க அளவு மாற்றங்களை சந்தித்துள்ளது. புதிய 8 இன்ச் தொடுதிரை கொண்ட தகவல் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை பெறக்கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை ஓட்டுனர் இயக்குவதற்கு மிகவும் எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

வசதிகள்

வசதிகள்

மசாஜ் வசதியுடன் கூடிய இருக்கைகளின் தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது. புதிய அப்ஹோல்ஸ்டரியும் காரின் பிரமியம் மாடலுக்கான அந்தஸ்தை கூட்டியிருக்கிறது. உயர் வேரியண்ட்டுகளில் பின்புற பயணிகளுக்கு தனியாக சிறிய டிவி திரைகள் உள்ளன. வயர்லெஸ் ஹெட்போன், 17 ஸ்பீக்கர்கள் கொண்ட மெரிடியன் ஆடியோ சிஸ்டம் என இந்த பட்டியல் நீண்டு செல்கிறது.

 எஞ்சின் விபரம்

எஞ்சின் விபரம்

புதிய ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவியில் 188 பிஎச்பி பவரையும், 420 என்எம் டார்க்கையும் வழங்க வல்ல 2.2 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் உள்ளது. 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டது. இந்த காரில் பேடில் ஷிஃப்ட் மூலமாக கியர் மாற்றும் வசதியும் உள்ளது. லிட்டருக்கு 12.7 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

தடம் மாறுதல் குறித்து எச்சரிக்கும் வசதி, அவசர காலத்திற்கான தானியங்கி பிரேக் சிஸ்டம், ஓட்டுனர் அயர்ந்துவிடுவதை கண்டறிந்து எச்சரிக்கும் வசதி, டயரில் காற்றழத்தம் குறைவதை எச்சரிக்கும் வசதி, டயரின் தரைப்பிடிப்பு குறைவதை தடுக்கும் தொழில்நுட்பம், அதிக நிலைத்தன்மையை வழங்கும் ஸ்டெபிளிட்டி புரோகிராம், மலைச்சாலைகளில் கார் பின்னோக்கி நகர்வதை தவிர்க்கும் ஹில் அசிஸ்ட் போன்ற பல பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

இந்தியாவில் அசெம்பிள்

இந்தியாவில் அசெம்பிள்

இதுவரை விற்பனையில் இருந்த ரேஞ்ச்ரோவர் எவோக் புனேயிலுள்ள ஜாகுவார்- லேண்ட்ரோவர் ஆலையில் அசெம்பிள் செய்யப்பட்டது. அதேபோன்று, புதிய மாடலும் புனே ஆலையில்தான் அசெம்பிள் செய்யப்பட இருக்கிறது.

முன்பதிவு நிலவரம்

முன்பதிவு நிலவரம்

சமீபத்தில் புதிய ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கப்பட்ட நிலையில், இதுவரையில் 125 பேர் இந்த மாடலுக்கு முன்பதிவு செய்துள்ளதாக இன்றைய அறிமுக விழாவில் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 விலை விபரம்

விலை விபரம்

எவோக் பியூர் : ரூ. 47.10 லட்சம்

எவோக் எஸ்இ: ரூ. 52.90 லட்சம்

எவோக் எச்எஸ்இ: ரூ. 57.70 லட்சம்

எவோக் எச்எஸ்இ டைனமிக்: ரூ. 63.20 லட்சம்

அனைத்தும் மும்பை எக்ஸ்ஷோரூம் விலையை அடிப்படையாகக் கொண்டது.

 
English summary
Range Rover launch the 2016 Evoque facelift in India, starting at Rs. 47.10 lakh ex-showroom (Mumbai). Booking for the new Evoque had commenced a few days ago, through authorised dealerships. The 2016 Range Rover Evoque has received several design updates compared to the outgoing model.
Story first published: Thursday, November 19, 2015, 14:24 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark