ரெனோ நிறுவனம் வழங்கும் 'டிசம்பர் செலிப்ரேஷன்ஸ்' - டிஸ்கவுண்ட்டுகள், ஆஃபர்கள் மழை துவங்கியது

By Ravichandran

ரெனோ நிறுவனம் சார்பாக, 'டிசம்பர் செலிப்ரேஷன்ஸ்' என்ற பெயரில் டிசம்பர் மாத கொண்டாட்ட சலுகைகள் (ஆஃபர்கள்) இந்தியாவில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

வருட நிறைவு அடைவதையொட்டி பல்வேறு கார் நிறுவனங்கள் ஏராளமான சலுகைகளையும், தள்ளுபடிகளையும் வழங்கி வருகின்றனர். ரெனோ நிறுவனம் சார்பாக வழங்கபடும் சலுகைகள் குறித்த விரிவான தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

டிசம்பர் செலிப்ரேஷன்ஸ்;

டிசம்பர் செலிப்ரேஷன்ஸ்;

ரெனோ நிறுவனம் ‘டிசம்பர் செலப்ரேஷன்ஸ்' என்ற பெயரில், தங்கள் நிறுவனம் சார்பாக சலுகைகளை வழங்குகின்றனர்.

பல்வேறு விதமான கார்கள் மீது இந்த சலுகைகள்ள் வழங்கபடுகிறது.

ஆஃபர்கள் இல்லாத மாடல்கள்;

ஆஃபர்கள் இல்லாத மாடல்கள்;

ஏராளமான மாடல்கள் மீது சலுகைகள் வழங்கபட்டாலும், ரெனோ நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட, க்விட் கார் மீது எந்த விதமான சலுகைகள், தள்ளுபடிகள் அல்லது லாபங்கள் எதுவும் வழங்கபட மாட்டாது என அறிவிக்கபட்டுள்ளது.

என்ன ஆதாயங்கள் கிடைக்கலாம்?

என்ன ஆதாயங்கள் கிடைக்கலாம்?

ரெனோ தயாரிப்புகள் மீது 1 லட்சம் ரூபாய் வரையிலான ஆதாயங்கள் வழங்கபடும் என தெரிவிக்கபட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் கிராண்ட் பரிசு (பிரைஸ்) என்ற வகையில், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் வழங்கபட உள்ளது.

வாராந்திர கிராண்ட் பரிசு (பிரைஸ்) என்ற வகையில், ஒரு ரெனோ வாகனம் இலவசமாக வழங்கபடுகிறது.

டஸ்டர் மீதான ஆஃபர்கள்;

டஸ்டர் மீதான ஆஃபர்கள்;

டஸ்டர் மீது ரூபாய் 80,000 வரையிலான சலுகைகள் வழங்கப்படுகிறது.

சில குறிப்பிட்ட ரெனோ டஸ்டர் வேரியண்ட்கள் மீது, 60,000 வரையிலான கூடுதல் ஆதாயங்கள் வழங்குகிறது ரெனோ நிறுவனம்.

ரெனோ டஸ்டர் 85 பிஎஸ் ஆர்எக்ஸ்எல் மாடல், சில குறிப்பிட்ட மாநிலங்களில், 9.99 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்கபடுகிறது.

லாட்ஜி மீதான ஆஃபர்கள்;

லாட்ஜி மீதான ஆஃபர்கள்;

இந்த டிசம்பர் மாதத்தில், ரெனோ லாட்ஜி மீது 1.65 லட்சம் வரையிலான ஆதாயங்கள் வழங்கபடுகிறது.

உற்பத்தி செய்யபட்ட தேதி முதல் உள்ள லாட்ஜி வாகனங்களுக்கு, 1.01 லட்சம் ரூபாய் வரையிலான நிச்சய ஆதாயங்களையும் ரெனோ நிறுவனம் வழங்குகிறது.

கார்பரேட் மற்றும் பிஎஸ்யூ எனப்படும் பப்ளிக் செக்டார் அண்டர்டேக்கிங் ஸ்கீம்களும் வழங்கபடுகிறது.

கோலியோஸ், ப்ளூயன்ஸ் மீதான ஆஃபர்கள்;

கோலியோஸ், ப்ளூயன்ஸ் மீதான ஆஃபர்கள்;

ரெனோ கோலியோஸ் பிரிமியம் எஸ்யூவி மீது ரூபாய் 6 லட்சம் வரையிலான சலுகைகள் வழங்கபடுகிறது.

தி ப்ளூயன்ஸ் பிரிமியம் செடான் மீது 4.50 லட்சம் ரூபாய வரையிலான ஆஃபர்கள் தரப்படுகிறது.

ரெனோ நிறுவனத்தின் கோலியோஸ் மற்றும் ப்ளூயன்ஸ் விசேஷங்கள் நிறைந்த கார்களாக இருந்தாலும், அவை இந்திய வாகன சந்தைகளில் எதிர்பார்த்த அளவிற்கு ஷோபிக்கவில்லை.

இதர ஆஃபர்கள்;

இதர ஆஃபர்கள்;

தி பல்ஸ் மற்றும் ஸ்காலா கார்களுக்கும் நாடு முழுவதும் சிறப்பான ஆஃபர்கள் வழங்கபட்டுள்ளன.

அனைத்து ஆஃபர்களும், ஸ்கீம்களும், டிஸ்கவுண்ட்களும் ஸ்டாக் உள்ளவரை மட்டுமோ அல்லது டிசம்பர் 31, 2015-ஆம் தேதி வரை மட்டுமே கிடைக்கும்.

ஆஃபர்களை பெற செய்ய வேண்டியவை;

ஆஃபர்களை பெற செய்ய வேண்டியவை;

ரெனோ நிறுவனம் சார்பாக தரப்படும் சலுகைகளை பெற, அருகில் உள்ள ரெனோ டீலர்ஷிப்களிடம் சென்று, உங்களுக்கு பிடித்த ஏதேனும் ரெனோ நிறுவனத்தின் கார்களை வாங்க வாண்டும்.

ஏதேனும் காரணங்களால் நீங்கள் கடந்த பண்டிகைகாலங்களின் போது, எந்த கார்களையும் வாங்காமல் விட்டு இருந்தால், ரெனோ நிறுவனம் வழங்கும் இந்த ‘டிசம்பர் செலிப்ரேஷன்ஸ்' கொண்டாட்டங்கள் சலுகைகளை பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவிக்கபடுகிறது.

Article Published On: Tuesday, December 8, 2015, 11:57 [IST]
English summary
Renault Introduces 'December Celebrations' Offers throughout India. Lots of attractive offers, benefits and discounts are available across Renault's portfolio. It is to be noted that, there are no offers or discounts on the latest introduction, the Kwid.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+