ரெனோ டஸ்ட்டர் AWD அட்வென்ச்சர் விலை ரூ.1.50 லட்சம் குறைப்பு!
ரெனோ டஸ்ட்டரின் ஆல் வீல் டிரைவ் அட்வென்ச்சர் எடிசன் மாடலின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட அந்த மாடல் ஆஃப் ரோடு பிரியர்களுக்கு ஏற்றதாக கருதப்படுகிறது.

அறிமுகம் செய்யப்பட்டபோது ரூ.12.49 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்தது.
இந்த நிலையில், இந்த மாடலின் விலை ரூ.10.99 லட்சம் விலையாக குறைக்கப்பட்டிருக்கிறது. இந்த விலை குறைப்பு சலுகை நாளை மறுதினம் வரை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டஸ்ட்டர் ஆல் வீல் டிரைவ் அட்வென்ச்சர் எடிசனை தவிர்த்து சாதாரண ஆல் வீல் டிரைவ் டஸ்ட்டருக்கு ரூ.15,000 வரை சேமிப்புச் சலுகைகளையும், இலவச இன்ஸ்யூரன்ஸ் சலுகையையும் வழங்குவதாக ரெனோ தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








