ரெனோ டஸ்ட்டர் எக்ஸ்ப்ளோர் எடிசன் அறிமுகம் - முழு விபரம்

Posted By:

மாருதி எஸ் க்ராஸ், ஹூண்டாய் க்ரெட்டா போன்ற புதிய காம்பேக்ட் எஸ்யூவிகளின் வருகை ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவிக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது. இதனை தவிர்த்துக் கொள்ளும் விதத்தில், கூடுதல் சிறப்பம்சங்களுடன் கூடிய டஸ்ட்டரின் ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

ரெனோ டஸ்ட்டர் எக்ஸ்ப்ளோர் என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய மாடலில் வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அதன் விபரங்களையும், விலை விபரத்தையும் ஸ்லைடரில் காணலாம்.

மாடல்கள் விபரம்

மாடல்கள் விபரம்

ரெனோ டஸ்ட்டரின் 85 பிஎஸ் மற்றும் 110 பிஎஸ் டீசல் எஞ்சின் மாடல்களில் இந்த புதிய எக்ஸ்ப்ளோர் எடிசன் கிடைக்கும். ரெனோ டஸ்ட்டரின் ஆர்எக்ஸ்எல் வேரியண்ட்டின் அடிப்படையில், கூடுதல் சிறப்பம்சங்களுடன் இந்த புதிய மாடல் வந்திருக்கிறது.

வெளிப்புற சிறப்பம்சங்கள்

வெளிப்புற சிறப்பம்சங்கள்

வெளிப்புறத்தில் ரேஸ் கார்களில் பயன்படுத்துவது போன்ற ரேஸிங் ஸ்ட்ரிப்ஸ் எனப்படும் கோடுகள் போன்ற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருக்கிறது. கருப்பு நிற ரூஃப் ரெயில், கரும்புகை சூழ்ந்தது போன்ற பின்னணி கொண்ட ஸ்மோக்டு டபுள் பேரல் ஹெட்லைட்டுகள், புல் பார் போன்ற பிளாஸ்டிக் அலங்கார ஆக்சஸெரீ, ஸ்கிட் பிளேட், புதிய அலாய் வீல்கள், கூடுதல் பனி விளக்குகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், பி மற்றும் டி பில்லர்கள் கருப்பு நிறத்தில் மேட் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கிறது.

 இன்டிரியர்

இன்டிரியர்

இன்டிரியரில் ஆங்காங்கே ஆரஞ்ச் வண்ணத்தை கொண்டு அலங்காரம் செய்துள்ளனர். க்ரோம் பூச்சுடன் கூடிய கதவு கைப்பிடிகள், ஆரஞ்ச் வண்ண ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்டரி, லெதர் உறை கொண்ட ஸ்டீயரிங் வீல், ஏசி வென்ட்டுகளை சுற்றிலும் ஆரஞ்ச் வண்ண வளையம், ஆரஞ்ச் வண்ணத்தில் நூல் தையல்கள் என மிகவும் பிரத்யேமாகவும் அலங்காரமாகவும் இருக்கிறது.

வசதிகள்

வசதிகள்

ரெனோ டஸ்ட்டர் எக்ஸ்ப்ளோர் எடிசனில் ஈக்கோ மோடு எனப்படும் எரிபொருள் சிக்கனத்தை தரும் டிரைவிங் ஆப்ஷன், கியர் ஷிப்ட் இன்டிகேட்டர், ஸ்பீடு லிமிட்டருடன் கூடிய க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்ட கூடுதல் வசதிகள் இடம்பெற்றிருக்கின்றன.

விலை விபரம்

விலை விபரம்

டஸ்ட்டர் 85 பிஎஸ் ஆர்எக்ஸ்எல் [எக்ஸ்ப்ளோர்]: ரூ.9.99 லட்சம்

டஸ்ட்டர் 110 பிஎஸ் ஆர்எக்ஸ்எல் [எக்ஸ்ப்ளோர்]: ரூ.11.10 லட்சம்

குறிப்பு: டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை

 
English summary
Renault India, one of the fastest growing automotive companies in India, launched the New Renault Duster Explore today. The Limited Edition Duster Explore celebrates the essence of adventure and symbolizes the indomitable spirit of exploring the outdoors.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark