ஏர்பேக்கில் கோளாறு: கார்களை திரும்ப அழைக்கும் ரெனோ!
ஏர்பேக்கில் இருக்கும் தொழில்நுட்ப கோளாறை சரிசெய்து தருவதற்காக, இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட 646 கார்களை திரும்ப அழைக்க இருக்கிறது ரெனோ கார் நிறுவனம்.
2011ம் ஆண்டு ஜூலை முதல் 2012ம் ஆண்டு செப்டம்பர் வரை தயாரிக்கப்பட்ட பல்ஸ் மற்றும் ஸ்காலா கார்களின் டீசல் மாடலின் ஏர்பேக்கில் தொழில்நுட்ப பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட கார்களை திரும்ப அழைத்து சோதனை செய்ய ரெனோ கார் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட பல்ஸ் மற்றும் ஸ்காலா கார்களின் டீசல் மாடலில் 646 கார்களை திரும்ப அழைக்க இருப்பதாக ரெனோ கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒருவேளை, பிரச்னை இருப்பது உறுதிசெய்யப்பட்டால், ஏர்பேக்கை இலவசமாக மாற்றித் தரவும் ரெனோ முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட கார் உரிமையாளர்களை தகவல் தெரிவிக்கப்படும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








