ரெனோ க்விட் கார் விரைவில் இரண்டு புதிய மாடல்களில் வருகிறது

Written By:

வரும் பிப்ரவரி மாதம் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், ரெனோ க்விட் காரின் இரண்டு புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய எஞ்சின் ஆப்ஷன் மற்றும் புதிய ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் ரெனோ க்விட் கார் வர இருக்கிறது. கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

பெரும் வரவேற்பு

பெரும் வரவேற்பு

ரெனோ க்விட் கார் தற்போது 800சிசி பெட்ரோல் எஞ்சின் மாடலில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கூடுதல் சக்தி கொண்ட மாடலும், ஆட்டோமேட்டிக் மாடலும் விரைவில் வர இருக்கிறது.

புதிய எஞ்சின்

புதிய எஞ்சின்

ரெனோ க்விட் கார் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்ட மாடலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது 75 பிஎஸ் பவர் கொண்டதாக இருக்கும்.

கூடுதல் சிறப்பம்சங்கள்

கூடுதல் சிறப்பம்சங்கள்

புதிய 1.0லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட ரெனோ க்விட் காரில் முன்புறத்திற்கான டியூவல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பெரிய டயர்கள், இரட்டை வைப்பர்கள் மற்றும் சிறப்பான சப்த தடுப்பு கட்டமைப்புடன் வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

ஆட்டோமேட்டிக் மாடல்

ஆட்டோமேட்டிக் மாடல்

ரெனோ க்விட் கார் ஆட்டோமேட்டட் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடலிலும் வர இருக்கிறது. இந்த மாடல் வாடிக்கையாளர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

ரெனோ க்விட் காரின் 1.0 லிட்டர் எஞ்சின் மாடல், ஹூண்டாய் இயான் 1.0 லிட்டர் எஞ்சின் மாடல் மற்றும் மாருதி ஆல்ட்டோ கே10 மாடல்களுடன் போட்டி போடும்.

விலை உயர்வு

விலை உயர்வு

உற்பத்தி செலவீன உயர்வு அதிகரித்துள்ளதையடுத்து, வரும் ஜனவரி முதல் ரெனோ க்விட் கார் உள்பட அனைத்து கார்களின் விலையையும் அதிகரிக்க ரெனோ கார் நிறுவனம் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Renault Kwid AMT and 1.0L Engine Models Coming Soon.
Story first published: Tuesday, December 29, 2015, 10:09 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark