ரெனோட் நிறுவனம் தயாரிக்கும் க்விட் காரின் டெலிவரி துவங்கியது
மார்க்கெட்டை அதிர வைத்திருக்கும் ரெனோட் க்விட் காரின் டெலிவரி துவங்கியுள்ளது.
கடந்த மாதம் செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட, ரெனோ நிறுவனத்தின் க்விட் கார் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
2.56 லட்சம் ரூபாய் என்ற விலையில் அறிமுகம் செயப்பட்ட க்விட், தற்போது வரை 25,000 புக்கிங்களை பெற்றுள்ளது. இதன் டெலிவரியும் துவங்கி வேகமாக நடைபெற்று வருகிறது.
க்விட் ஹேட்ச்பேக் கார் நாடு முழுவதும் பரவலாக வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.

சுமார் 35 சதவிகித வாடிக்கையாளர்கள் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
க்விட் காரின் அறிமுகத்தை அடுத்து, ரெனாட் நிறுவனத்தின் டீலர்களிடம் வரும் வாடிக்கையாளர்கள் வருகையின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக ரெனோட் இந்தியா தெரிவித்துள்ளது. புதுமையான விர்ச்சுவல் ஷோரூம் மற்றும் ரெனோட் க்விட் ஆப்-பும் மக்களிடம் வேகமாக பிரபலமாகி வருகிறது.
ஈர்க்ககூடிய விலையில் வரும் க்விட் காருடன் நிறைய ஆஃபர்களும் கிடைக்கின்றது. ரெனோட் காருக்கு 50,000 கிலோமீட்டர் / இரண்டு வருடங்களுக்கான பராமரிப்பு பாலிசி கிடைக்கின்றது. இந்த வசதியை, 80,000 கிலோமீட்டர் / 4 வருடங்களுக்கான பராமரிப்பு பாலிசியாகவும் நீட்டித்து வாடிக்கையாளர்கள் கொள்ளலாம். கூடுதலாக, இரண்டு ஆண்டுகளுக்கு சிறப்பு சாலையோர உதவிகளையும் ரெனோட் வழங்குகிறது.
ரெனோட் க்விட் ஹாட்ச்பேக்-கின் 98 சதவிகித உதிரிபாகங்கள் இங்கேயே தயாரிக்கப்படுகிறது. அதன் பராமரிப்பு செலவுகளும் குறைவாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இவை அனைத்தும் தாண்டி, ரெனோ காரில் 300 லிட்டர் பூட்-ஸ்பேஸ், 180 மில்லிமீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் 4.1 இஞ்ச் அளவிலான டச்-ஸ்க்ரீன் வசதி கொண்ட இன்ஃபோடெய்ன்மெண்ட் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது குறிப்பிடதக்கது.


Click it and Unblock the Notifications








