சென்னை அருகே பட்டாம்பூச்சியாய் பறந்த ரெனோ க்விட்... தீபாவளி ரிலீஸ்!
ரெனோவின் புத்தம் புதிய குட்டி கார் மாடலாக வர இருக்கும் ரெனோ க்விட் கார் தற்போது சென்னை மற்றும் சுற்று வட்டார சாலைகளில் வைத்து தீவிர சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சில நாட்களுக்கு முன், சாலையில் சோதனைக்காக சென்று கொண்டிருந்த அந்த காரை, அந்த வழியில் மற்றொரு காரில் சென்ற ஒருவர் வீடியோ எடுத்து யூ- ட்யூபில் வெளியிட்டிருக்கிறார். அதில், ரெனோ க்விட் கார் ரொம்பவே க்யூட்டான கார் மாடலாக இருக்கிறது.

மூடாக்கு இல்லை...
நெடுஞ்சாலையில் சோதனை செய்யப்பட்டு கொண்டிருந்த அந்த ரெனோ க்விட் கார் எந்தவொரு மூடாக்கும் போடாமல், தயாரிப்பு நிலை மாடலாகவே இருக்கிறது. எனவே, விரைவில் உற்பத்திக்கு கொண்டு செல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிசைன்
வழக்கமான குட்டி கார் மாடலாக இல்லாமல், போட்டியாளர்களை விட டிசைனில் சற்று வித்தியாசமாகவும், கொஞ்சம் பெரிய காராகவும் தெரிவதால், வாடிக்கையாளர்களை கவரும் என்று கருதப்படுகிறது.

விலை
இந்த புதிய காரை ரூ.3 லட்சம் ஆரம்ப விலையில் கொண்டு வருவதற்கு ரெனோ திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அப்படி, இந்த விலையில் வந்தால், நிச்சயம் ஒரு சிறப்பான வர்த்தகத்தை நிலைநாட்டும்.

ரிலீஸ்
வரும் தீபாவளி பண்டிகையையொட்டி, இந்த புதிய கார் மாடலை ரெனோ விற்பனைக்கு கொண்டு வந்துவிடும் என்று ஆட்டோமொபைல் வட்டாரங்கள் கணிப்பு தெரிவிக்கின்றன.
வீடியோ
சென்னை அருகே ரெனோ க்விட் கார் சோதனை செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோவை காணலாம்.


Click it and Unblock the Notifications








