Subscribe to DriveSpark

மாருதியை அண்ணாந்து பார்க்க வைத்த ரெனோ க்விட் கார் புக்கிங்!

Written By:

ரெனோ க்விட் காருக்கான முன்பதிவு தொடர்ந்து பல புதிய சாதனை இலக்குகளை தொட்டு வருகிறது. அந்த நிறுவனத்தின் அதிகபட்சமான முன்பதிவுகளை பெற்ற புதிய கார் மாடல் என்ற பெருமையும் கிடைத்திருக்கிறது.

சென்னையில் கனமழையால் உற்பத்தியில் சுணக்கம் ஏற்பட்டு டெலிவிரிகள் குறித்த காலத்தில் கொடுக்க முடியாத நிலை இருக்கிறது. ஆனாலும், வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ரெனோ க்விட் காரை வாங்குவதில் இருந்து பின்வாங்கவில்லை. தற்போது முன்பதிவு புதிய எண்ணிக்கையை தொட்டு சாதனை படைத்திருக்கிறது.

To Follow DriveSpark On Facebook, Click The Like Button
முன்பதிவு

முன்பதிவு

புதிய கார்கள் விற்பனைக்கு வரும்போது, அதிக முன்பதிவுகள் பெறுவது வழக்கமே. ஆனால், ஒரு சில கார் மாடல்கள் எதிர்பார்ப்பை விஞ்சி தொடர்ந்து பல புதிய இலக்குகளை தொட்டு, அதன் தயாரிப்பு நிறுவனங்களையே திக்குமுக்காட வைக்கும். அந்த வித்தில், ஹூண்டாய் க்ரெட்டா போன்றே, ரெனோ க்விட் காரும் 70,000 முன்பதிவுகளை பெற்ற 'எலைட்' சமூகத்தில் இணைந்துள்ளது.

வரவேற்பு ஏன்

வரவேற்பு ஏன்

ரெனோ க்விட் கார் வரவேற்பை பெற்றதற்கு சிறப்பான டிசைன் ஒரு முக்கிய காரணம். அதேநேரத்தில், டிசைன் மட்டும் இருந்தால் இந்திய வாடிக்கையாளர்கள் ஒத்துக் கொள்வார்களா? எனவே, பல கூடுதல் சிறப்பம்சங்களை இந்த கார் பெற்றிருக்கிறது. இந்த காரை வாங்க ஆர்வமுடன் இருப்பவர்களுக்கு அந்த விஷயங்களை ஒருமுறை நினைவூட்டுகிறோம்.

 இடவசதி

இடவசதி

இந்த காரின் உட்புறத்தில் போட்டியாளர்களைவிட மிக சிறப்பான இடவசதியை கொண்ட மாடல். 4 பெரியவர்கள், ஒரு சிறியவர் என 5 பேர் சிறப்பாக அமர்ந்து செல்ல வசதியுள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் புதிய 799 சிசி எஞ்சின் இந்தியாவுக்கென புதிதாக உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும், போட்டியாளர்களைவிட சிறந்த செயல்திறன் மிக்கதாக ட்யூனிங் செய்துள்ளனர். இந்த காரில் மூன்று சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் எஞ்ஜின் 53 பிஎச்பி பவரையும், அதிகபட்சம் 72 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதனுடன் 5 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் இணைந்து செயல்படுகிறது.

அதிக மைலேஜ்

அதிக மைலேஜ்

லிட்டருக்கு 25.17 கிமீ மைலேஜ் தரும் என்று ரெனோ தெரிவிக்கிறது. நடைமுறையில் 20 கிமீ.,க்கும் அதிகமான மைலேஜை தரும் என்று எதிர்பார்க்கலாம். இந்த காரில் 28 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் கொண்டுள்ளது. ஒருமுறை முழுமையாக பெட்ரோல் நிரப்பும்பட்சத்தில் 500 கிமீ தூரத்திற்கும் அதிகமாக பயணிக்க முடியும். அடிக்கடி பெட்ரோல் நிலையம் செல்ல வேண்டியிருக்காது.

 வசதிகள்

வசதிகள்

போட்டி மாடல்களில் இல்லாத பல புதிய வசதிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. பேஸ் மாடலை தவிர்த்து பிற மாடல்களில் ஏசி வசதி, பவர் ஸ்டீயரிங், 7 இன்ச் தொடுதிரையுடன் கூடிய மீடியா நவ் நேவிகேஷன், முன்புற கதவுகளுக்கான பவர் விண்டோஸ், புளூடூத் வசதியுடன் மியூசிக் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் மீட்டர் கன்சோல் ஆகியவையும் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

பூட் ரூம்

பூட் ரூம்

காம்பேக்ட் செடான் கார்களை ஒப்பிடும் அளவுக்கு பூட் ரூம் இடவசதி உள்ளது. அதுவும் குட்டி கார் ரகத்தில் 300 லிட்டர் பூட் ரூம் இடவசதி கொண்ட இந்த கார் நிச்சயம் வாடிக்கையாளர்களை மறுமுறை யோசிக்க வைக்காது. பின் இருக்கைகளை மடக்கும்போது, பொருட்கள் வைப்பதற்கான இடவசதியை 1,115 லிட்டர் கொள்ளளவை அதிகரித்துக் கொள்ள வழியுண்டு.

பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

ஓட்டுனருக்கான ஏர்பேக் ஆப்ஷனலாக வழங்கப்படுகிறது. இதுதவிர, சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், பார்க்கிங் பிரேக் வார்னிங் சிஸ்டம், முன்சக்கரங்களில் டிஸ்க் பிரேக் போன்றவையும் இடம்பெற்றிருக்கின்றன.

வண்ணங்கள்

வண்ணங்கள்

சிவப்பு, வெள்ளை, சில்வர், சாம்பல் மற்றும் டஸ்ட்டர் போன்றே பிரத்யேக பித்தளை வண்ணத்திலும் கிடைக்கிறது.

விலை

விலை

எல்லாம் ஓகே என்றாலும், இதன் விலைதான் இந்தளவு வெற்றியை தேடித்தந்துள்ளது. குறைவான விலையில், நிறைவான குட்டி கார் மாடல் என்ற விஷயத்தை வாடிக்கையாளர்கள் மனதில் ஆழப்பதித்துவிட்டது.

இந்த காரின் தமிழகத்தில் அனைத்து நகரங்களிலுமான ஆன்ரோடு விலைகளை தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க.

சர்வீஸ் நெட்வொர்க்

சர்வீஸ் நெட்வொர்க்

பொதுவாக சிறிய கார்களுக்கு வலுவான சர்வீஸ் நெட்வொர்க் தேவை. எனவே, இந்த காருக்கான வரவேற்பை தக்க வைக்க ரெனோ கார் நிறுவனம் தனது சர்வீஸ் நெட்வொர்க்கை வலுப்படுத்தி வருகிறது. சமீபத்தில் தெலங்கானாவில் 190வது ஷோரூமை திறந்திருக்கிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் டீலர்ஷிப்புகளின் எண்ணிக்கையை 240-ஆக அதிகரிக்க திட்டமிட்டிருக்கிறது.

காத்திருப்பு காலம்

காத்திருப்பு காலம்

தற்போது ரெனோ க்விட் காருக்கான காத்திருப்பு காலம் 6 மாதங்களுக்கும் மேலாக இருக்கிறது. சமீபத்தில் சென்னையில் பெய்த மழையால் ரெனோ- நிசான் கூட்டணி ஆலையிலும் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டது. மேலும், சாலைகள் மோசமாக சேதமடைந்து இருப்பதால், போக்குவரத்து பாதிப்பு போன்ற காரணங்களால் கார்களை வெளியூர்களுக்கு எடுத்துச் செல்வதில் தாமதம் ஏற்படும் நிலை உள்ளது. இந்த காத்திருப்பு காலம் இன்னும் அதிரிக்கும் வாய்ப்புள்ளது. ஆனாலும், மனதுக்கு நிறைவான ஓர் தயாரிப்பை வாங்குவதற்கு காத்திருத்தலிலும் ஒரு சுகம் இருக்கிறது.

 
English summary
Renault Kwid has bagged over 70,000 bookings since its launch.
Please Wait while comments are loading...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark