குட் நியூஸ்... நாளை விற்பனைக்கு வருகிறது ரெனோ க்விட் கார்!

Written By:

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரெனோ க்விட் கார் நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

டெல்லியில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் இந்த புதிய பட்ஜெட் கார் மாடல் இந்திய மார்க்கெட்டில் களமிறங்குகிறது.

Renault Kwid
 

புதிய 800சிசி எஞ்சினுடன் வரும் ரெனோ க்விட் காரில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக வருகிறது.

லிட்டருக்கு 25 கிமீ மைலேஜ் தரும் என்பதும் இந்த கார் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அதாவது, மாருதி ஆல்ட்டோ 800 மற்றும் ஹூண்டாய் இயான் போன்ற இதன் செக்மென்ட்டில் அதிக மைலேஜ் தரும் கார் மாடல் இதுதான்.

மினி எஸ்யூவி கார் போன்ற தோற்றம், 180மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், 13 இன்ச் வீல்கள், டச்ஸ்கிரீன் டிஸ்ப்ளே போன்ற பல நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த கார் வருகிறது.

ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரையிலான விலைப் பட்டியலில் விற்பனைக்கு வர இருக்கிறது.

English summary
The much awaited news has arrived, and that is of the Renault Kwid launch date—24th of September.
Story first published: Wednesday, September 23, 2015, 3:44 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark