ரெனோ நிறுவனத்தின், க்விட் கார் விலை ஜனவரி முதல் உயர்கிறது

By Ravichandran

வரும் ஜனவரி 1ந் தேதி முதல், ரெனோ க்விட் காரின் விலை 3 சதவிகிதம் வரை உயர்த்தப்படுகிறது.

பல்வேறு இந்திய கார் தயாரிக்கும் நிறுவனங்களும், வெளிநாட்டு கார் தயாரிக்கும் நிறுவனங்களும், தங்கள் கார்களின் விலைகளை வரும் ஜனவரி 2016 முதல் உயர்த்த உள்ளதாக அறிவிப்புகள் வெளியிட்டு வருகின்றனர்.

ரெனோ நிறுவனம், தங்களின் க்விட் கார்களின் விலைகளை உயர்த்த உள்ளது குறித்த விரிவான தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

விலையேற்றம் அமலாகும் தேதி;

விலையேற்றம் அமலாகும் தேதி;

ரெனோ க்விட் கார்கள் சில மாதங்களுக்கு முன்பு தான் அறிமுகம் செய்யபட்டது. அது வாடிக்கையாளர்கள இடையே அமோக வரவேற்பை பெற்று வருகின்றது.

ரெனோ க்விட் மாடல் மீது அறிவிக்கபட்டுள்ள விலை உயர்வு ஜனவரி 2016 முதல் அமலாக உள்ளது.

விலை ஏற்றம் எவ்வளவு?

விலை ஏற்றம் எவ்வளவு?

ரெனோ க்விட் மாடல்கள் மீது அறிவிக்கபட்டுள்ள விலை ஏற்றம், சராசரியாக 3 சதவிகிதம் வரை உயர்த்தபடலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.

அதாவது, க்விட் கார்களின் தற்போதைய விலைகளில் இருந்து, 3 % வரையிலான கூடுதல் விலைகளில் கிடைக்க உள்ளது.

உற்பத்தி அதிகரிக்க திட்டம்?

உற்பத்தி அதிகரிக்க திட்டம்?

தற்போதைய நிலையில், ரெனோ நிறுவனம் 75,000 க்விட் கார்களுக்கான புக்கிங்களை பெற்றுள்ளது. க்விட் மாடல் சராசரியாக 6 மாத காத்திருப்பு காலத்துடனேயே கிடைகின்றது.

ரெனோ நிறுவனம், இப்போதைய சூழ்நிலையில் கொண்டுள்ள உற்பத்தி திறன் படி, ஒரு மாதத்திற்கு 5,000 க்விட் கார்கள் தயாரிக்கபடுகிறது. இந்த உற்பத்தி திறனை, ஒரு மாதத்திற்கு 8,000 க்விட் கார்கள் என்ற அளவில், உற்பத்தியை வரும் காலங்களில் அதிகரிக்க ரெனோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ரெனோ க்விட் மாடல், 800 சிசி, 3 - சிலிண்டர்கள் உடைய பெட்ரோல் இஞ்ஜின் கொண்டுள்ளது. இதன் இஞ்ஜின் 53 பிஹெச்பி-யையும், உச்சபட்சமாக 72 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

இப்போதைய நிலையில், 5-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே ரெனோ க்விட் கார்கள் கிடைகின்றது. வரும் 2016-ஆண்டு கட்டத்தில், க்விட் காரை ஏஎம்டி தேர்வுடன் வெளியிட ரெனோ நிறுவனம் திட்டமிட்டு வருகின்றது.

மைலேஜ்;

மைலேஜ்;

ஆராய் அல்லது ஆட்டோமோட்டிவ் ரிசர்ச் அசோசியேஷன் ஆஃப் இந்தியா-வின் ஒப்புதலின் படி, ரெனோ நிறுவனத்தின் க்விட் மாடல், ஒரு லிட்டருக்கு 25.17 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகின்றது.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி?

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி?

ரெனோ க்விட் மாடல், சர்வதேச சந்தைகளிலும் விற்கபடும் வகையில் குளோபல் தயாரிப்பாக ரெனோ இந்தியா நிறுவனத்தால் தயாரிக்கபட்டு வருகின்றது.

இந்தியாவில் தயாரிக்கபடும் ரெனோ க்விட் கார்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யபடுகின்றது.

வருங்கால திட்டம்;

வருங்கால திட்டம்;

ரெனோ நிறுவனம், க்விட் காரை வருங்காலங்களில், 1.0 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜினுடன் அறிமுகம் செய்ய திட்டம் கொண்டுள்ளனர்.

ஆனால், இந்த 1000 சிசி கொண்ட இஞ்ஜின் உடைய க்விட் கார் அறிமுகம் செய்யபடலாம் என்பது குறித்த தெளிவான தகவல்கள் எதுவும் வெளியிடபடவில்லை.

விலை விவரங்கள்;

விலை விவரங்கள்;

இன்றைய நிலையில், ரெனோ க்விட் கார்களின் அடிப்படை மாடலின் விலை 2.56 லட்சம் ரூபாயாக (எக்ஸ்-ஷோரும் டெல்லி) உள்ளது.

டாப்-எண்ட் எனப்படும் உயர் ரக மாடல், ரெனோ க்விட் கார்களின் விலை 3.53 லட்சம் ரூபாயாக (எக்ஸ்-ஷோரும் டெல்லி) உள்ளது.

இந்த விலை ஏற்றம் அமலுக்கும் வந்த பின், ரெனோ க்விட் கார்களின் அடிப்படை மாடல் 2.64 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரும் டெல்லி) விலையில் கிடைக்கும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் கார்கள் விலை உயர்கிறது

பிஎம்டபுள்யூவின் அனைத்து கார்களின் மீதும், 3% விலை ஏற்றம் - விரிவான தகவல்கள்

ஹூண்டாய் கார்களின் விலை ரூ.30,000 வரை உயர்த்தப்படுகிறது!

செய்திகள் உடனுக்குடன்…

செய்திகள் உடனுக்குடன்…

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

Most Read Articles
English summary
Renault Kwid Model Prices are to be hiked By Almost Three Percent. The Kwid Car was launched in the Indian market a few months ago. The Price hike over the Kwid Cars will come to effect from January 2016.
Story first published: Wednesday, December 16, 2015, 16:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X