ரெனோட் நிறுவனத்தின் க்விட் கார் 50,000 புக்கிங்குகளை பெற்று சாதனை

By Ravichandran

ரெனோ நிறுவனத்தின் க்விட் கார் 50,000 புக்கிங்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது.

ரெனோ நிறுவனம் தயாரிக்கும் க்விட் கார் செப்டம்பர் 24, 2015 அன்று அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகமான தினத்தில் இருந்தே நல்ல வரவேற்ப்பை பெரும் இந்த கார், அதிக அளவில் புக்கிங்கள் பெற்று வருகின்றது.

க்விட் காருக்கு நேரடி போட்டியாக மாருதி ஆல்டோ மற்றும் ஹூண்டாய் இயான் விளங்குகிறது. இந்த செக்மண்டில், 5 சதவிகிததிற்கு கூடுதலான சந்தை இடத்தை பிடிக்க ரெனோட் நிறுவனம் கடும் போட்டியில் இறங்கியுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் க்விட் கார்கள், இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய உள்ளது.

Renault Kwid-The Most Wanted Car (Rs. 3 - 4 Lakh) Sets Another Record

க்விட் காருக்கு அளவுக்கு அதிகமான வரவேற்பு கிடைத்ததால், தற்போது க்விட் கார் புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்கள் 6 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். க்விட் காரின் அடிப்படை வேரியண்ட் 2.57 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரும் டெல்லி) விலையிலும், உயர் ரக வேரியண்ட் க்விட் 3.53 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரும் டெல்லி) விலையிலும் கிடைக்கின்றது.

ரெனோட் க்விட் ஹாட்ச்பேக்-கின் 98 சதவிகித உதிரிபாகங்கள் இங்கேயே தயாரிக்கப்படுவதால், அதன் உதிரிபாகங்களின் விலையும், பராமரிப்பு செலவுகளும் குறைவாக இருக்கும் என்று தெரிகிறது.

ரெனோட் க்விட் 799 சிசி, 3 இன்லைன் சிலிண்டர்கள் கொண்ட லிக்விட் கூல்ட் பெட்ரோல் இஞ்ஜின் கொண்டுள்ளது. 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ள இஞ்ஜின், 53 பிஹெச்பி-யையும், உச்சபட்சமாக 72 என்எம் டார்க்கினை வெளியிடும் திறன் கொண்டுள்ளது. க்விட் ஒரு லிட்டருக்கு, 25 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் திறன் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை, க்விட் கார்கள் தேர்வு முறையிலான ஏர்பேக்-கள், சென்ட்ரல் லாக்கிங், ஆடிபில் (காதுகளால் கேட்க கூடிய) பார்க்கிங் பிரேக் வார்னிங் உள்ளிட்ட அம்சங்கள் கொண்டுள்ளது.

இவை அனைத்தையும் தாண்டி, க்விட் காரை பிரபலபடுத்த ரெனோ நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக, நாட்டின் எந்த பகுதியில் இருந்து வேண்டுமானாலும், காணக்கூடிய விர்ச்சுவல் ஷோரூம்களை நிறுவியுள்ளது. மேலும், மோபைல் ஷோரூம்களும் அமைக்கபட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

டிரைவ்ஸ்பார்க கருத்து;

மக்களின் மனதை கொள்ளை கொண்ட ரெனோட் க்விட், பல ஆண்டுகளுக்கு தொடர்ந்து சாதனை படைக்கும் என நம்பலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, October 31, 2015, 9:39 [IST]
English summary
Renault Kwid-The Most Wanted Car Sets Another Record of 50,000 bookings. The affordable hatchback was launched on September 24, 2015, in India. From the day of its Launch, Kwid has been grabbing eyeballs in large numbers and getting thousands of Bookings at astonishing pace.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+