ரெனோ க்விட் காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

Written By:

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ரெனோ க்விட் பட்ஜெட் கார் பற்றிய செய்திகள்தான் இப்போது ஆட்டோமொபைல் மீடியாக்களின் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது.

இந்தநிலையில், ரெனோ க்விட் காரின் வேரியண்ட் மற்றும் அதில் இடம்பெற்றிருக்கும் வசதிகள் குறித்த விபரம் கசிந்துள்ளது. அவற்றை ஸ்லைடரில் காணலாம்.

வேரியண்ட்டுகள் விபரம்

வேரியண்ட்டுகள் விபரம்

மொத்தம் 4 வேரியண்ட்டுகளில் வர இருக்கிறது. ஸ்டான்டர்டு, ஆர்எக்ஸ்இ, ஆர்எக்ஸ்எல் மற்றும் ஆர்எக்ஸ்டி ஆகிய வேரியண்ட்டுகளில் வருகிறது. வேரியண்ட் வாரியான வசதிகள் விபரத்தை தொடர்ந்து காணலாம். இதில், முதல் இரண்டு வேரியண்ட்டுகளில் வசதிகள் மிக குறைவு. எனவே, நடுத்தர மாடலாக வரும் ஆர்எக்ஸ்எல் வேரியண்ட்தான் வாடிக்கையாளர்களை கவரும். அதற்கடுத்து, டாப் வேரியண்ட்டும் சிறப்பான வசதிகளை அளிக்கும்.

 ஸ்டான்டர்டு மாடல்

ஸ்டான்டர்டு மாடல்

 • முழு அளவில் ஸ்பேர்வீல்
 • ஸ்டீல் வீல்கள்
 • கருப்பு நிற பம்பர்
 • ஏசி இல்லை, ஹீட்டர் வசதி உண்டு
 • ஒற்றை வண்ண டேஷ்போர்டு
 • முழுவதும் டிஜிட்டல் மீட்டர் கன்சோல்
 • சாம்பல் வண்ண அப்ஹோல்ஸ்டரி
 • கியர் ஷிஃப்ட் இன்டிகேட்டர்
ரெனோ க்விட் ஆர்எக்ஸ்இ

ரெனோ க்விட் ஆர்எக்ஸ்இ

 • ஏசி வசதி
 • சில்வர் வண்ண ஸ்டீல் வீல்கள்
 • எஞ்சின் இம்மொபைலைசர்
 • ஸ்டீரியோ சிஸ்டம் [ஆப்ஷனல்]
ரெனோ க்விட் ஆர்எக்ஸ்எல்

ரெனோ க்விட் ஆர்எக்ஸ்எல்

 • பாடி கலர் பம்பர்
 • எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங் சிஸ்டம்
 • புளூடூத், யுஎஸ்பி, ஆக்ஸ் போர்ட், 2 ஸ்பீக்கர்கள் கொண்ட ஸ்டீரியோ சிஸ்டம்
 • இடதுபுற சைடு மிரர்
 ரெனோ க்விட் ஆர்எக்ஸ்டி

ரெனோ க்விட் ஆர்எக்ஸ்டி

 • முன்புற கதவுகளுக்கான பவர் விண்டோஸ்
 • இரட்டை வண்ண டேஷ்போர்டு
 • இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
 • முன்புற பனி விளக்குகள்
 • டிரைவருக்கான ஏர்பேக் [ஆப்ஷனல்]
கஸ்டமைஸ் ஆப்ஷன்

கஸ்டமைஸ் ஆப்ஷன்

ரெனோ க்விட் காருக்கு கூடுதலாக வாங்கி பொருத்திக் கொள்வதற்காக 60 விதமான கூடுதல் ஆக்சஸெரீகளை ரெனோ கார் நிறுவனம் வழங்க இருக்கிறது. இதன்மூலம், தோற்றத்தை கூடுதல் பொலிவாகவும், கூடுதல் வசதிகளுடன் ரெனோ க்விட் காரை மெருகேற்றிக் கொள்ள வாய்ப்புள்ளது.

வாரண்டி

வாரண்டி

ரெனோ க்விட் காருக்கு 2 ஆண்டுகள் அல்லது 50,000 கிமீ.,க்கான வாரண்டி வழங்கப்பட உள்ளது.

English summary
Renault Kwid Variant Wise Details Leaked In Online.
Story first published: Tuesday, September 22, 2015, 10:15 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark