வண்ணமயமான விழாவில் இந்தியர்களுக்கு தரிசனம் தந்த ரெனோ லாட்ஜி!

மும்பையில் நடந்த 2015 ஸ்டார் கில்டு விருது வழங்கும் விழாவில் முதல்முறையாக ரெனோ லாட்ஜி எம்பிவி கார் இந்தியர்களுக்கு தரிசனம் தந்தது. பாலிவுட் நட்சத்திரங்கள் குவிந்திருந்த இந்த விழாவில் ரெனோ லாட்ஜி காரும் ஒரு நட்சத்திரமாகவே ஜொலித்தது.

டஸ்ட்டர் வெற்றியின் மூலம் தெம்பாகியிருக்கும் ரெனோ கார் நிறுவனம், அடுத்ததாக லாட்ஜி என்ற புதிய எம்பிவி காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. சமீபத்தில் இந்த எம்பிவி காரின் படத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

இந்தநிலையில், மும்பையில் நடந்த சினிமா நட்சத்திரங்களுக்கான விருது வழங்கும் விழாவில் இந்தியாவுக்கான இந்த புதிய லாட்ஜி எம்பிவி கார் மாடலை முதல்முறையாக பொது தரிசனத்திற்கு விட்டது ரெனோ கார் நிறுவனம். லாட்ஜி எம்பிவிக்கு துணையாக விழாவில் டஸ்ட்டரையும் வைத்து பார்வையாளர்களை கவர்ந்தது ரெனோ கார் நிறுவனம்.

வண்ணமயமான அந்த விழாவின் நிகழ்வுகள் மற்றும் புதிய ரெனோ லாட்ஜி காரின் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

ரெனோ லாட்ஜி கார்

ரெனோ லாட்ஜி கார்

இந்தியாவில் ரெனோ லாட்ஜி எம்பிவி காரை பாலிவுட் நடிகர் அனில் கபூர் மற்றும் ரெனோ இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுமீத் ஷானி ஆகியோர் அறிமுகம் செய்தனர்.

முதல் வாடிக்கையாளர்

முதல் வாடிக்கையாளர்

புதிய ரெனோ லாட்ஜி எம்பிவி காரின் முதல் உரிமையாளர் என்ற பெருமையை பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் பெற்றிருக்கிறார். அவருக்கு லாட்ஜி எம்பிவி காரை ரெனோ இந்தியா நிர்வாக இயக்குனர் சுமீத் ஷானி டெலிவிரி கொடுத்தார்.

3. டஸ்ட்டரும், அலியா பட்டும்...

3. டஸ்ட்டரும், அலியா பட்டும்...

இந்தியர்களின் மிகவும் விரும்பப்படும் மாடலான ரெனோ டஸ்ட்டர் பாலிவுட் நடிகை அலியா பட்டையும் கவர்ந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லைதான்...!

4. ஆட்டோகிராஃப் மாடல்

4. ஆட்டோகிராஃப் மாடல்

ரெனோ டஸ்ட்டர் ஆல் வீல் டிரைவ் மாடலில் பாலிவுட் பிரபலங்கள் பலர் ஆட்டோகிராஃப் போட்டனர். தீபிகா படுகோனை தனது கையெழுத்தை பதிவு செய்தார்.

ரெனோ லாட்ஜி எம்பிவி கார் தரிசனம்

பாலிவுட் நடிகர் குல்ஷான் குரோவர் ரெனோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மாடலுடன் போஸ் தருகிறார்.

ரெனோ லாட்ஜி எம்பிவி கார் தரிசனம்

பிரியங்கா சோப்ரா ஆட்டோகிராப்பை பதிவு செய்கிறார்.

ரெனோ லாட்ஜி எம்பிவி கார் தரிசனம்

ராஜ்குமார் ஹிரானி ஆட்டோகிராஃப் பதிவு செய்தபின் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

ரெனோ லாட்ஜி எம்பிவி கார் தரிசனம்

பிரபல நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் ஆட்டோகிராஃப் பதிவு செய்த காட்சி.

ரெனோ லாட்ஜி எம்பிவி கார் தரிசனம்

நடிகர் சாஹித் கபூர் ஆட்டோகிராஃப் பதிவு செய்த பின் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

ரெனோ லாட்ஜி எம்பிவி கார் தரிசனம்

ஜாக்கி ஷெரஃப் மகனும் நடிகருமான டைகர் ஷெரஃப் ஆட்டோகிராஃப் போட்ட பின்னர் டஸ்ட்டருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

ரெனோ லாட்ஜி எம்பிவி கார் தரிசனம்

ஆட்டோகிராஃப் போட்ட பின் வருண் தவான் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 20, 2015, 8:43 [IST]
English summary
Renault was the main attraction in the star studded Renault Star Guild Awards and celebrities were happy checking out Renault Cars. Many of them posed around after signing on the Renault Duster on theRed carpet. The highlight of the show was the showcasing of the new Renault LODGY on screen with India’s 3 decade favourite Bollywood Celebrity and internationally acclaimed actor - Anil Kapoor
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+