இந்தியாவில் ரெனோ டஸ்ட்டர் பிக்கப் டிரக் மாடலை அறிமுகப்படுத்த திட்டம்
இந்தியாவில் ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் பிக்கப் டிரக் மாடலை அறிமுகம் செய்ய ரெனோ கார் நிறுவனம் பரிசீலித்து வருகிறது.
இந்திய மார்க்கெட்டில் பிக்கப் டிரக்குகளுக்கான எதிர்கால சந்தையை மனதில் வைத்து இந்த புதிய பிக்கப் டிரக் மாடலை அறிமுகம் செய்ய ரெனோ கார் நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது.

அறிமுகம்
கடந்த ஜூன் மாதம் பியூனோஸ் ஏர்ஸ் மோட்டார் ஷோவில், ரெனோ டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அடிப்படையிலான ஓரா என்ற இந்த பிக்கப் டிரக் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. பிரேசில் மார்க்கெட்டில் முதலில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

எஞ்சின் ஆப்ஷன்
பிரேசில் நாட்டில் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வருகிறது. இந்தியாவில் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் கே9கே டீசல் எஞ்சினின் 110 பிஎஸ் மாடலில் அறிமுகம் செய்யப்படும்.

சிறப்பம்சங்கள்
2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் ஆப்ஷன்களில் கிடைக்கும். 650 கிலோ எடை சுமக்கும் திறன் கொண்ட 683 லிட்டர் கொள்ளளவு கொண்ட பக்கெட் பொருத்தப்பட்டு இருக்கும்.

வசதிகள்
மீடியா நேவிகேஷன் சாதனம், ஏர்பேக், அலாய் வீல்கள், ஸ்டீயரிங் வீலில் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கும்.

விற்பனை
அடுத்த ஆண்டு முதல் பாதியில் இந்த புதிய ரெனோ ஓரா பிக்கப் டிரக்கின் உற்பத்தி துவங்கப்பட உள்ளது. பிரேசிலை தொடர்ந்து, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளிலும் விற்பனைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

சென்னையில் உற்பத்தி
இந்தியாவில் விற்பனைக்கு வரும்போது, சென்னையில் உள்ள ரெனோ- நிசான் ஆலையில் இந்த புதிய பிக்கப் டிரக் உற்பத்தி செய்யப்படும். மேலும், அதிக அளவில் உள்நாட்டு பாகங்கள் பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர். இதுதவிர, சென்னையிலிருந்து பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும்.

தனிநபர் மார்க்கெட்
இந்தியாவில், வர்த்தக வாகன மார்க்கெட் மட்டுமின்றி, தனிநபர் மார்க்கெட்டையும் குறிவைத்து இந்த புதிய பிக்கப் டிரக் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








