20ந் தேதி சென்னையில் அறிமுகமாகிறது ரெனோவின் புதிய சின்ன கார்!
வரும் 20ந் தேதி சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் ரெனோ கார் நிறுவனத்தின் புதிய ஹேட்ச்பேக் கார் முதல்முறையாக பார்வைக்காக அறிமுகம் செய்யப்பட உள்ளது.
சென்னை, கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இந்த புதிய காருக்கான அறிமுக நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில், ரெனோ குழுமத்தின் தலைவர் கார்லோஸ் கோஸன் மற்றும் அந்நிறுவனத்தின் உயரதிகாரிகள் பலர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

இந்த புதிய ஹேட்ச்பேக் காரில் 800சிசி பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு வருகிறது. எனவே, இந்த கார் மாருதி ஆல்ட்டோ 800, ஹூண்டாய் இயான் கார்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும்.
சென்னையிலுள்ள நிசான்- ரெனோ கூட்டணி கார் தொழிற்சாலையில்தான் இந்த புதிய கார் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இந்தியாவிற்கு மட்டுமின்றி, பல்வேறு நாடுகளுக்கு சென்னை துறைமுகம் வழியாக இந்த காரை ஏற்றுமதி செய்யவும் ரெனோ திட்டமிட்டிருக்கிறது.
புதிய ரெனோ குட்டிக் கார் பற்றி குட்டி குட்டித் தகவல்கள்!!


Click it and Unblock the Notifications








