ஏஎம்டி கியர்பாக்ஸுடன் கலக்கப்போகும் புதிய ரெனோ க்விட்!

By Saravana

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், ரெனோ க்விட் கார் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. பட்ஜெட் கார்களில் மிகவும் வித்தியாசமான ஸ்டைலுடன், அதிக இடவசதி கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த கார் வாடிக்கையாளர்களை வசீகரிக்கும் வாய்ப்புகள் அதிகமிருக்கிறது.

மேலும், வாடிக்கையாளர்களை எதிர்பார்க்கும் அம்சங்களுடன் ரெனோ க்விட் கார் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடலிலும் க்விட் காரை அறிமுகம் செய்ய ரெனோ திட்டமிட்டிருக்கிறதாம்.

எஸ்யூவி ஸ்டைல்

எஸ்யூவி ஸ்டைல்

மாருதி ஆல்ட்டோ 800 மற்றும் ஹூண்டாய் இயான் கார்களின் மார்க்கெட்டை குறிவைத்து இவைகளுக்கு இணையான விலையில் இந்த கார் நிலைநிறுத்தப்பட உள்ளது. அதேநேரத்தில், அந்த கார்களை போல அல்லாமல், இது டிசைனில் எஸ்யூவி ரக சாயலை பெற்றிருப்பதே எதிர்பார்ப்புக்கு காரணமாகியிருக்கிறது.

 புதிய எஞ்சின் ஆப்ஷன்

புதிய எஞ்சின் ஆப்ஷன்

ரெனோ க்விட் காரில் 800சிசி பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட இருக்கிறது. இந்த நிலையில், 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்ட மாடலையும் அறிமுகம் செய்ய ரெனோ கார் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறதாம்.

ஏஎம்டி மாடல்

ஏஎம்டி மாடல்

1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்ட மாடலில் ஆட்டோமேட்டட் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக அறிமுகம் செய்யவும் ரெனோ முடிவு செய்துள்ளது. இதன்மூலம், மாருதி ஆல்ட்டோ கே10 ஏஎம்டி கார் மாடலுக்கும், டாடா நானோ ஏஎம்டி மாடலுக்கும் நெருக்கடியை தரும் வாய்ப்புள்ளது.

உள்நாட்டு பாகங்கள்

உள்நாட்டு பாகங்கள்

இந்த புதிய குட்டிக் காருக்கு 98 சதவீத பாகங்கள் இந்திய சப்ளையர்களிடமிருந்தே பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம், போட்டியாளர்களுக்கு சவால் தரும் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

பேஸ் மாடல் ரூ.3 லட்சத்திலிருந்து துவங்கும். இந்த புதிய கார் மாடல் மூலமாக இந்திய மார்க்கெட்டில் ஸ்திரமான வர்த்தகத்தை பெற ரெனோ திட்டமிட்டிருக்கிறது. சென்னையிலுள்ள ரெனோ- நிசான் கார் ஆலையில் இந்த புதிய கார் மாடல் உற்பத்தி செய்யப்படும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 22, 2015, 12:10 [IST]
English summary
Renault has taken into consideration that more Indian automobile buyers are leaning towards AMT options. Now post Kwid launch in India the manufacturer will be introducing a 1.0-litre AMT variant.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+