லிட்டருக்கு 250 கிமீ மைலேஜ் தரும் காரை தயாரிக்கிறதா பிஎம்டபிள்யூ?!
மைலேஜ் கணக்கீடுகளின்படி, லிட்டர் பெட்ரோலுக்கு 250 கிமீ செல்லும் தரும் கார் மாடல் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் பிஎம்டபிள்யூ கார் நிறுவனம் இறங்கியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐரோப்பாவிலிருந்து வெளிவரும் ஆட்டோமொபில்வாச் என்ற ஆட்டோமொபைல் இதழில் இந்த தகவல் வெளியாகியிருக்கிறது. ஆவலைத் தூண்டியிருக்கும், இந்த புதிய கார் குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

எமிசன் பிரச்னை
ஐரோப்பிய நாடுகளில் வாகனங்களுக்கான புகை வெளியிடும் அளவில் கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனை எதிர்கொள்ளும் விதத்தில், எதிர்காலத்துக்கு ஏற்றவாறு இந்த கான்செப்ட் கார் மாடலை உருவாக்கும் முயற்சியில் பிஎம்டபிள்யூ இறங்கியுள்ளது.

அடிப்படை மாடல்
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஐ3 எலக்ட்ரிக் காரின் ரேஞ்ச் எக்ஸ்டென்டர் மாடலின் அடிப்படை தொழில்நுட்பத்தை மேம்படுத்தி, இந்த காரில் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்டமைப்பு
இலகு எடை கொண்டதாக இருப்பதற்காக, கார்பன் இழை மற்றும் உறுதிமிக்க அலுமினிய பாகங்கள் பயன்படுத்தப்பட்டு கட்டமைக்கப்பட உள்ளது. இது 1,200 கிலோ எடை கொண்டதாக இருக்கும். மேலும், அதிக எரிபொருள் சிக்கனத்தை தருவதற்காக, சிறப்பான ஏரோடைனமிக்ஸுடன் வடிவமைக்கப்படுகிறது.

4 சீட்டர்
இந்த காரை வர்த்தக ரீதியில் தயாரித்து விற்பனை செய்யும் திட்டமும் இருக்கிறதாம். இதனால், 4 பேர் அமர்ந்து செல்வதற்கான இருக்கை வசதியுடன் வர இருக்கிறது.

ஹைபிரிட் மாடல்
அதிகபட்ச எரிபொருள் சிக்கனத்தை பெறுவதற்காக, இதனை இரட்டை எரிபொருள் வகை கொண்ட மாடலாக இருக்கும். இந்த காரில் ஒரு எலக்ட்ரிக் மோட்டாரும், 2 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சினும் பொருத்தப்பட்டிருக்கும். இந்த 2 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் ஸ்கூட்டரிலிருந்து எடுத்து, சில மாறுதல்களை செய்து இந்த காரில் பொருத்தப்பட உள்ளதாம்.

மைலேஜ்
இந்த காரில் இருக்கும் மின் மோட்டார் மற்றும் 2 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் ஆகியவை இணைந்து கணக்கீடுகளின்படி, 400 மில்லி பெட்ரோலில் 100 கிமீ செல்லும். அதாவது, லிட்டருக்கு 250 கிமீ மைலேஜ் என்ற அளவில் இந்த காரை அறிமுகம் செய்ய பிஎம்டபிள்யூ தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறதாம்.

இதர அம்சங்கள்
இந்த காரில் 348 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட்ரூம் இருக்கும். மேலும், ஒரு கிலோமீட்டருக்கு 10 கிராம் மட்டுமே கார்பனை வெளியிடும் தன்மை கொண்ட மாடலாக இருக்கும்.

ஃபோக்ஸ்வேகன் கார்
லிட்டருக்கு 111 கிமீ மைலேஜ் தரும் எக்ஸ்எல்1 என்ற காரை ஃபோக்ஸ்வேகன் ஏற்கனவே விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








