பெங்களூரில், ஸ்கானியா பஸ் ஆலை திறப்பு... 5 முக்கிய விஷயங்கள்

Written By:

பெங்களூர் அருகே நரசப்புராவில் ஸ்கானியா நிறுவனத்தின் புதிய பஸ் உற்பத்தி தொழிற்சாலை திறக்கப்பட்டிருக்கிறது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி, ஸ்கானியா நிறுவனத்தின் சிஇஓ மார்ட்டின் லன்ட்ஸ்டெட், ஸ்கானியா இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆன்டர்ஸ் கிரண்ட்ஸ்டோமர் ஆகியோர் இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.

இதுதவிர, மத்திய, கர்நாடக அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் ஸ்கானியா நிறுவனத்தின் பணியாளர்கள் இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். இந்த புதிய பஸ் உற்பத்தி தொழிற்சாலை குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

புதிய பஸ் தொழிற்சாலை

புதிய பஸ் தொழிற்சாலை

2013ம் ஆண்டு இந்த ஆலையில் டிரக் உற்பத்தி துவங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது பஸ் உற்பத்தி செய்யும் பிரிவும் செயல்பட துவங்க உள்ளது. ஆசிய பிராந்தியத்தில் ஸ்கானியா நிறுவனம் அமைத்திருக்கும் முதல் பஸ் ஆலை இது.

உற்பத்தி திறன்

உற்பத்தி திறன்

தற்போது இந்த ஆலையில் ஆண்டொன்றுக்கு 2,500 டிரக்குகளையும், 1,000 பஸ்களையும் உற்பத்தி செய்ய முடியும். வரும் 2017ம் ஆண்டில் இந்த உற்பத்தி திறனை ஆண்டுக்கு 5,000 டிரக்குகள் மற்றும் 2,500 பஸ்களை உற்பத்தி செய்யும் வகையில், அதிகரிக்க ஸ்கானியா திட்டமிட்டுள்ளது.

பணியாளர்கள்

பணியாளர்கள்

தற்போது இந்த ஆலையில் 650 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். வரும் 2017ம் ஆண்டிற்குள் புதிதாக 800 தொழிலாளர்களை ஸ்கானியா பணியமர்த்த உள்ளது.

ஏற்றுமதி

ஏற்றுமதி

பெங்களூரில் உற்பத்தியாகும் டிரக், பஸ்களை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய ஸ்கானியா திட்டமிட்டுள்ளது. மேலும், இந்தியாவை ஏற்றுமதி கேந்திரமாக பயன்படுத்திக் கொள்ள முனைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மாற்று எரிபொருள் பேருந்துகள்

மாற்று எரிபொருள் பேருந்துகள்

எத்தனால், உயிரி எரிபொருள் போன்ற மாற்று வகை எரிபொருளில் இயங்கும் பேருந்துகளை அறிமுகம் செய்யவும் ஸ்கானியா திட்டமிட்டுள்ளது. இதற்காக, அந்த ஆலையில் உயிரி எரிபொருள் உற்பத்தி மையம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்று வகை எரிபொருள் பேருந்துகள் இந்தியாவின் எதிர்கால போக்குவரத்து தேவைகளுக்கு புதிய பாதை வகுக்கும் என்று ஸ்கானியா தெரிவித்துள்ளது.

 
English summary
In the presence of 1,500 guests, including ministers, ambassadors, customers, suppliers and employees, Scania Commercial Vehicles India inaugurated the company’s first bus manufacturing plant in India recently.
Story first published: Wednesday, April 8, 2015, 12:34 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark