ஸ்கோடா நிறுவனம் துவங்கி 120 ஆண்டுகள் நிறைவு - சிறப்புத் தகவல்கள்!

By Ravichandran

செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடா நிறுவனம் துவங்கி 120 ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது. ஸ்கோடா நிறுவனம் உற்பத்தியை துவங்கி இந்த ஆண்டுடன், 120 ஆண்டுகள் நிறைவடைகிறது.

சைக்கிள் தயாரிக்கும் நிறுவனமாக சிறிய அளவில் துவங்கப்பட்ட ஸ்கோடா நிறுவனம், இன்று உலகளாவிய முன்னணி கார் நிறுவனமாக மாறியுள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் கீழ் செயல்பட்டு வரும், ஸ்கோடா நிறுவனத்தின் பரிணாம வளர்ச்சி குறித்த தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

ஸ்கோடா நிறுவனத்தின் உருவாக்கம்;

ஸ்கோடா நிறுவனத்தின் உருவாக்கம்;

ஸ்கோடா நிறுவனம் முதன் முதலாக சைக்கிள் தயாரிக்கும் நிறுவனமாக, 1895-ஆம் ஆண்டில் துவக்கபட்டது.

வாக்லேவ் லாரின் மற்றும் வாக்லேவ் கிளமண்ட் என்ற இருவர் இணைந்து, ஸ்கோடாவை சைக்கிள் தயாரிக்கும் நிறுவனமாக ஸ்தாபித்தனர்.

இஞ்ஜினியரிங் சிறப்புயர்வு, கண்டுபிடிப்புகள் மற்றும் தனித்துவமான பாணி உள்ளிட்ட கொள்கைகள் ஸ்கோடாவிற்கு பிரதானமான நோக்கங்களாக உள்ளன.

ஸ்கோடாவின் சரித்திரம் மிகவும் ஸ்வாரஸ்யமானதாக உள்ளது. ஸ்கோடா நிறுவனமானது, இரு உலக போர்களையும், ஐரோப்பா கண்டம் மற்றும் உலகம் எதிர்கொண்ட சில மோசமான நிதி நெருக்கடி நிலைமைகளை மீறி இன்றும் வெற்றிகறமாக இயங்கி கொண்டிருக்கிறது.

சைக்கிள் உற்பத்தி;

சைக்கிள் உற்பத்தி;

மெக்கானிக்காக இருந்த வாக்லேவ் லாரின் மற்றும் புத்தக விற்பனையாளராக இருந்த வாக்லேவ் கிளமண்ட் என்ற இருவர் இணைந்து, ஸ்கோடாவை சைக்கிள் தயாரிக்கும் நிறுவனத்தை ஸ்தாபித்தனர்.

இவர்கள் இருவரும் இணைந்து, 1895-ஆம் ஆண்டில், முதன் முதலாக, "ஸ்லாவியா" என்ற பெயரில் சைக்கிளை வடிவமைத்து, தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மோட்டர்சைக்கிள் உற்பத்தி;

மோட்டர்சைக்கிள் உற்பத்தி;

1895-ஆம் ஆண்டில், "ஸ்லாவியா" என்ற பெயரில் துவங்கிய சைக்கிள் உற்பத்தி வெற்றிகரமாக சென்று கொண்டிருந்தது. இதன் அடுத்த முயற்சியாக, 1899-ஆம் ஆண்டில் மோட்டர் சைக்கிள்களை வடிவமைக்க துவங்கினர்.

ஆனால், மோட்டர்சைக்கிள்களை தயாரிக்கும் போது, தங்கள் நிறுவனத்தின் பெயரை லாரின் அண்ட் கிளமெண்ட் கோ என்று மாற்றி கொண்டனர். வெவ்வேறு வகையில், இந்த நிறுவனம் 4,000 மோட்டர்சைக்கிள்களை உருவாக்கியது.

இவர்களின் அடுத்த கட்ட திட்டம் கார்களை உருவாக்குவதாக இருந்தது.

கார் உற்பத்தி;

கார் உற்பத்தி;

சைக்கிள் மற்றும் மோட்டர்சைக்கிள்களின் உற்பத்தியில் நல்ல வெற்றி கண்டதனால், தங்களின் நிறுவனத்தை அடுத்த கட்டதிற்கு முன்னேற்ற உத்தேசித்தனர்.

இதையடுத்து, இந்த இருவரும் இணைந்து 1905-ஆம் ஆண்டில் கார்களை தயாரிக்க துவங்கினர்.

கார்களை தயாரிக்க துவங்கும் போது, "பைஃஜன் ஸ்கோடாவா" என்ற செக் குடியரசு இஞ்ஜினியரிங் நிறுவனத்துடன் இணைப்பு செய்து கொண்டனர்.

இதையடுத்து தான், இந்நிறுவனத்தின் பெயர் "ஸ்கோடா" என்ற தற்போதைய பெயரை பெற்றது.

ஸ்கோடா- ஃபோக்ஸ்வேகன் இணைப்பு;

ஸ்கோடா- ஃபோக்ஸ்வேகன் இணைப்பு;

மாறி வரும் காலத்திற்கு ஏற்றவாறு, தங்களின் திட்டங்களை முழுமைபடுத்தி கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

தகுந்த பங்குதாரர்களை தேடிய ஸ்கோடா நிறுவனம், 1991-ஆம் ஆண்டில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்துடன் கை கோர்த்து கொண்டனர்.

ஸ்கோடா பிராண்டின் நிலையான வளர்ச்சி;

ஸ்கோடா பிராண்டின் நிலையான வளர்ச்சி;

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்துடன் கை கோர்த்தது, ஸ்கோடா நிறுவனத்திற்கு நன்மையை பயத்தது.

பின்னர், ஸ்கோடா நிறுவனம், 1996-ஆம் ஆண்டில் ஆக்டேவியா காரையும், 2000-ஆம் ஆண்டில் ஃபேபியா காரையும் அறிமுகம் செய்தது.

இவை ஸ்கோடா நிறுவனத்தை ஒரு ஸ்திரமான கார் உற்பத்தி நிறுவனமாக நிலை நிறுத்தியது. மேலும், யேட்டி மற்றும் சூப்பர்ப் மாடல் கார்கள் ஸ்கோடாவின் வெற்றியை உறுதி செய்து வருகின்றது.

ஸ்கோடாவின் இன்றைய நிலை;

ஸ்கோடாவின் இன்றைய நிலை;

இன்றைய நிலையில், ஸ்கோடா 100-ற்கும் மேற்பட்ட சர்வதேச சந்தைகளில், ஒரு வெற்றிகரமான பிராண்டாக திகழ்ந்து வருகின்றது.

ஸ்கோடா பிராண்டின் கீழ் தற்போது, 7 வெவ்வேறு மாடல் கார்கள் கிடைக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, November 12, 2015, 17:45 [IST]
English summary
Skoda Celebrates 120 Years — Here Is a Look At It’s History. Skoda is celebrating an incredible milestone in 2015 as it celebrates 120 years of production. Skoda, founded by Václav Laurin and Václav Klement, has developed from a small-scale bicycle manufacturer to a global brand active in more than 100 international markets.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+