ஸ்கோடா நிறுவனத்தின் கார்களின் விலை உயர்த்தபட உள்ளது

Written By:

ஸ்கோடா இந்தியா நிறுவனமும் தங்கள் கார்களின் விலைகளை வரும் ஜனவரி 1, 2016 முதல் உயர்த்த திட்டமிட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக, கார் நிறுவனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தங்கள் நிறுவன கார்களின் விலைகளை உயர்த்தி கொண்டே இருக்கின்றன. ஸ்கோடா நிறுவனம், தங்கள் நிறுவன தயாரிப்புகள் மீது செய்ய உள்ள விலை உயர்வு குறித்த விரிவான தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

விலை உயர்வு அமலாகும் தேதி;

விலை உயர்வு அமலாகும் தேதி;

ஸ்கோடா நிறுவனம் சார்பாக செய்யபட உள்ள விலைஉயர்வானது வரும் ஜனவரி 1, 2016-ஆம் தேதி முதல் நடைமுறைபடுத்தபட உள்ளது.

தெரிவிக்கபடும் காரணம்;

தெரிவிக்கபடும் காரணம்;

உள்ளீடுகளின் விலை உயர்வு தான், இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக ஸ்கோடா நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், தொடர் மாற்றங்கள் கண்டு வரும் சந்தை நிலவரங்களும், அந்நிய செலாவணி விகிதமும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் சரிந்து வரும் மதிப்பும், இந்த விலை உயர்வு தடுக்க முடியாத ஒன்றாக மாற்றி விட்டதாக ஸ்கோடா அறிவித்துள்ளது.

விலை ஏற்றத்தின் அளவு;

விலை ஏற்றத்தின் அளவு;

ஸ்கோடா நிறுவனம் சார்பாக இந்தியாவில் விற்கபடும் அனைத்து மாடல் கார்களின் விலைகளும், 2 % முதல் 3 % வரை உயர்த்த பட உள்ளதாக தெரிகிறது.

விலை மாற்றத்தின் வரம்பு;

விலை மாற்றத்தின் வரம்பு;

இந்தியாவில் கிடைக்கும் அனைத்து கார்களின் விலைகளும், 14,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை உயர்த்தபடுகின்றது.

எனினும், எந்த மாடல்களின் மீது எவ்வளவு விலை உயர்வு செய்யபட உள்ளது என்ற தெளிவான தகவல்கள் வழங்கபடவில்லை.

இந்தியாவில் கிடைக்கும் ஸ்கோடா தயாரிப்புகள்;

இந்தியாவில் கிடைக்கும் ஸ்கோடா தயாரிப்புகள்;

தற்போதைய நிலையில், ஸ்கோடா நிறுவனம் சார்பாக, தி ரேபிட், ஆக்டேவியா, யெடி மற்றும் சூப்பர்ப் உள்ளிட்ட கார்கள் விற்பனை செய்யபடுகின்றது.

2016-ல் பல்வேறு அறிமுகங்கள்?

2016-ல் பல்வேறு அறிமுகங்கள்?

ஸ்கோடா ஆட்டோ நிறுவனம், 2016-ஆம் ஆண்டில் பல்வேறு அறிமுகங்களை செய்ய உள்ளது.

இந்த அறிமுகங்கள், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் செய்யபட உள்ளதாக எதிர்பார்க்கபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஸ்கோடோ மட்டுமல்லாது, ஹூண்டாய், நிஸ்ஸான், மாருதி சுஸுகி நிறுவனமும் தங்கள் கார்களின் விலைகளை உயர்த்த உள்ளது.

மேலும், சொகுசு கார் நிறுவனங்களான ஆடி மற்றும் பிஎம்டபுள்யூ உள்ளிட்டவையும் தங்கள் கார்களின் விலைகளை ஜனவரி 1, 2016 முதல் உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளன.

இது தொடர்பான செய்திகளை தெரிந்து கொள்ள,

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் கார்கள் விலை உயர்கிறது

பிஎம்டபுள்யூவின் அனைத்து கார்களின் மீதும், 3% விலை ஏற்றம் - விரிவான தகவல்கள்

ஹூண்டாய் கார்களின் விலை ரூ.30,000 வரை உயர்த்தப்படுகிறது

செய்திகள் உடனுக்குடன்…

செய்திகள் உடனுக்குடன்…

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

English summary
Skoda Auto has informed that, it would be increasing the prices of its Cars from January 1, 2016. All the Skoda cars prices would be hiked by 2% to 3% based on the models of the Cars selected by Customers. The Prices of Skoda Cars would be increased by Rs. 14,000 to maximum Rs. 50,000.
Story first published: Tuesday, December 15, 2015, 12:23 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark