கூடுதல் சிறப்பம்சங்களுடன் ஸ்கோடா ரேபிட் காரின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!
பண்டிகை காலத்தையொட்டி, கூடுதல் சிறப்பம்சங்களுடன் கூடிய மாடல்களை கார் நிறுவனங்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன.
அந்த வரிசையில், ஸ்கோடா ரேபிட் காரின் சிறப்பு பதிப்பு மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. இந்த காரில் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

வெளிப்புற சிறப்பம்சங்கள்
வெளிப்புறத்தை பொறுத்தவரையில், பிரத்யேக வண்ணம் தீட்டப்பட்ட கூரை, பக்கவாட்டில் ரேஸிங் ஸ்ட்ரிப்ஸ் ஸ்டிக்கர்கள் உள்ளன. இது ரேபிட் காரின் அழகை கூடுதல் கவர்ச்சியை தருவதாக இருக்கிறது.

ரிமோட் டிராக்கிங் சிஸ்டம்
முதல்முறையாக இந்த செக்மென்ட்டில் ரிமோட் கார் டிராக்கிங் சிஸ்டத்துடன் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. காரின் பயணங்கள் குறித்த தகவல்கள், கார் எந்த இடத்தில் செல்கிறது அல்லது இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளும் வசதி, வேக வரம்பு செய்யும் வசதி போன்றவற்றை டிராக்ப்ரோ சிஸ்டம் மூலமாக பெறலாம்.

ஏர்பேக்ஸ்
ரேபிட் காரில் டியூவல் ஏர்பேக்குகளை நிரந்தர பாதுகாப்பு ஆக்சஸெரீயாக வழங்குகிறது ஸ்கோடா ஆட்டோ நிறுவனம். இதன்மூலமாக, இந்த சி செக்மென்ட்டில் சிறந்த பாதுகாப்பு வசதி கொண்ட மாடல்களில் ஒன்று என்ற பெருமையை பெற்றிருக்கிறது.

இன்டிரியர்
பின்புற இருக்கை பயணிகளுக்கு பிரத்யேக டியூவல் ஏசி வென்ட்டுகள், புளூடூத் தொடர்பு வசதி கொண்ட 2 டின் ஆடியோ சிஸ்டம், அட்ஜெஸ்ட்டபிள் ஸ்டீயரிங் வீல், புரொடெக்டர் ஹெட்லைட்டுகள், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், மேனுவல் ஆப்ஷனுடன் கூடிய 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் போன்றவை முக்கிய சிறப்புகளாக உள்ளன.

விலை விபரம்
ரூ.6.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய ஸ்கோடா ரேபிட் ஆனிவர்சரி எடிசன் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், இந்த மாதம் 30ந் தேதி வரை மட்டுமே இந்த ஆனிவர்சரி எடிசன் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications








