ஸ்கோடா ரேபிட் காருக்கு சிறப்பு சலுகைகள்... மிஸ் பண்ணிடாதீக!

Written By:

ஸ்கோடா ரேபிட் காருக்கு அதிரடிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த மாதத்திற்கான சலுகைகளாக இதனை ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் குறிப்பிட்டு செய்திக் குறிப்பை வெளியிட்டிருக்கிறது.

இந்த சிறப்புச் சலுகையின் மூலமாக, விலையில்லாமல் காப்பீடு, சாலை அவசர உதவித் திட்டம் மற்றும் கூடுதல் கால வாரண்டியை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

ஸ்கோடா ரேபிட்
 

மேலும், இந்த மாதச் சலுகையில், ஸ்கோடா ரேபிட் காருக்கு 7.99 சதவீத வட்டி வீதத்தில் சிறப்பு கடன் திட்டத்தை வாடிக்கையாளர்கள் பெற முடியும். ஸ்கோடா ரேபிட் கார் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கிறது.

வாடிக்கையாளர்கள் சாதாரண மற்றும் தானியங்கி கியர்பாக்ஸ் கொண்ட மாடல்களில் தேர்வு செய்து வாங்க முடியும். ரூ.7.74 லட்சம் ஆரம்ப விலையிலிருந்து ரூ.11.94 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

English summary
For June, 2015 the Czech manufacturer will be providing offers on its Rapid sedan. Skoda has named this offer as the ‘What A June Offer' and is a valid for a limited period in India.
Story first published: Saturday, June 6, 2015, 9:59 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos