சிங்கிள் சார்ஜில் 1,496 கிமீ தூரம் பயணித்து புதிய சாதனை படைத்த 'சோலார்' கார்!

Written By:

ஆஸ்திரேலியாவில், World Solar Challenge என்ற பெயரில் சூரிய மின் சக்தியில் இயங்கும் கார்களுக்கான சிறப்பு கார் பந்தயம் சமீபத்தில் நடந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த போட்டியில், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத சோலார் வாகனங்களுக்கான பிரத்யேக கார் பந்தயமாக நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில், உலகம் முழுவதும் இருந்து 42 அணிகள் தங்களது புதிய படைப்புகளுடன் கலந்து கொண்டன. அதில், நெதர்லாந்து நாட்டை சேர்ந்த டீம் ஐன்தோவன் என்ற அணியின் கார் சிங்கிள் சார்ஜில் 1,500 கிமீ தூரம் பயணித்து சாதனை படைத்தது.

போட்டி நிபந்தனைகள்

போட்டி நிபந்தனைகள்

போட்டியில் பங்கேற்கும் அணியினர், தங்களது காரின் பேட்டரியில் அதிகபட்சமாக 5kWh அளவுக்கு மின்சாரத்தை சார்ஜ் செய்து கொள்ளலாம். மீதமுள்ள மின் ஆற்றலை சூரிய மின்சக்தி தகடுகள் மூலமாகவோ அல்லது இயக்க ஆற்றலிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். குறைவான எரிசக்தியில் அதிக தூரம் பயணிப்பதே இந்த போட்டியின் நோக்கம்.

 இதர கட்டுப்பாடுகள்

இதர கட்டுப்பாடுகள்

காரின் டிசைன் மற்றும் உட்புறம் ஆகியவை நடைமுறை பயன்பாட்டிற்கு ஏதுவாக இருக்கிறதா, பேட்டரி சார்ஜ் மட்டுமின்றி, வெளியிலிருந்து பெறப்பட்ட மின் ஆற்றல் ஆகியவை கணக்கிட்டு, போட்டியில் வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்படுகின்றனர்.

சாதனை

சாதனை

இந்த ஆண்டு போட்டியில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் முதல் மூன்று இடங்களை பிடித்தாலும், நெதர்லாந்து நாட்டை சேர்ந்த ஐன்தோவன் தொழில்நுட்ப பல்கலைகழகத்தை சேர்ந்த குழுவினரின் சோலார் கார், சிங்கிள் சார்ஜில் 930 மைல் [1,500 கிமீ] தூரம் கடந்து புதிய சாதனை படைத்தது.

ஸ்டைல் கார்

ஸ்டைல் கார்

ஸ்டெல்லா லக்ஸ் என்று பெயரிடப்பட்ட அந்த காரில் 4 பேர் பயணிக்கலாம். இது குடும்பத்தினரின் பயன்பாட்டுக்கு சிறந்த மாடலாகவும் அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதிக மைலேஜ் தரும் வகையிலான ஏரோடைனமிக்ஸ் டிசைன் காருக்கு கூடுதல் வலு சேர்க்கும் அம்சமாக தெரிவிக்கப்பட்டது. மேலும், காரின் நடுப்பகுதியில், காற்றினால் ஏற்படும் தடங்கலை தவிர்க்கும் விதமாக, இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கிறது.

 இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

அருகில் வரும் பிற வாகனங்களுடன் தொடர்பு கொள்வதற்கான தொழில்நுட்பங்கள், டச் ஸ்கிரீன் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவை இந்த காரின் கூடுதல் அம்சமாக இருக்கிறது. மேலும், அருகில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரும்போது, மியூசிக் சிஸ்டத்தின் சப்தத்தை தானாகவே குறைத்து, ஓட்டுனரின் கவனத்திற்கு கொண்டு வரும் நுட்பமும் குறிப்பிடத்தக்கது.

போட்டி தூரம்

போட்டி தூரம்

ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதியிலுள்ள டார்வினிலிருந்து, தெற்கு பகுதியிலுள்ள அடிலெய்டு நகரம் வரை சுமார் 3,000 கிமீ அளவுக்கு பந்தய தூரமாக வைத்து நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு போட்டியை பிரிட்ஜ்ஸ்டோன் டயர் நிறுவனம் ஸ்பான்சர் செய்திருந்தது.

 
English summary
Team Eindhoven from the Netherlands, who set a world record by driving Stella Lux family car to almost 930 miles (1500 kilometers) on a single charge recently concluded world solar challenge race.
Story first published: Monday, November 2, 2015, 17:57 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark