விற்பனையில் கவலைக்கிடமான நிலையில் உள்ள கார் மாடல்கள்!

Written By:

கற்ற வித்தையையும் காட்டி கார் நிறுவனங்கள் மார்க்கெட்டிங் செய்தாலும், சில கார்களின் விற்பனை சரிவு முகத்திலேயே இருக்கின்றன. டிசைன், வியாபாரக் கொள்கை, வாடிக்கையாளர் சேவை குறைபாடுகள், விலை, போட்டி கார் மாடல்களின் என பல காரணங்களால் சில கார் மாடல்கள் மார்க்கெட்டில் கவலைக்கிடமான நிலையில் உள்ளன.

இந்திய மார்க்கெட்டில் மொத்தம் 120 கார் மாடல்கள் விற்பனையாகின்றன. அதில், சில கார் மாடல்களின் விற்பனை மிக மோசமாக இருந்து வருகிறது. அவ்வாறு, நடப்பாண்டில் விற்பனையில் மிக மோசமான நிலையில் உள்ள கார் மாடல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். இந்த தொகுப்பில் உள்ள பெரும்பாலான கார் மாடல்களை வாங்குவதை தவிர்ப்பதும் நலம். ஏனெனில், மறு விற்பனை மதிப்பிலும், உதிரிபாகங்கள் தட்டுபாடும் இருக்கும்.

01. மாருதி ரிட்ஸ்

01. மாருதி ரிட்ஸ்

சிறந்த எஞ்சின், செயல்திறன் கொண்ட கார் மாடல் என்பதோடு, மாருதியின் மிக பிரம்மாண்டமான நெட்வொர்க் இருந்தும் மாருதி ரிட்ஸ் காரின் விற்பனை அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. எனவே, விரைவில் இந்த காருக்கு மாருதி விடை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிற மாருதி கார்கள் பெரும் பங்களிப்பை வழங்கி வரும் நிலையில், மாருதியின் விர்பனையில் 2 சதவீதத்திற்கும் குறைவான பங்களிப்பை இந்த கார் வழங்கி வருகிறது.

02. ஸ்கோடா யெட்டி

02. ஸ்கோடா யெட்டி

சமீபத்தில் புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட ஸ்கோடா யெட்டி எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டது. அப்படியிருந்தும், ஸ்கோடா யெட்டியின் விற்பனை மிக மோசமாக இருக்கிறது. மாதத்திற்கு 10 முதல் 12 யெட்டி எஸ்யூவிகள் மட்டுமே விற்பனையாகிறதாம்.

03. ஃபியட் லீனியா

03. ஃபியட் லீனியா

சிறந்த கட்டுமானம் மற்றும் எஞ்சின்களை உடைய ஃபியட் லீனியா கார் விற்பனையில் மிக மோசமான நிலையிலேயே உள்ளது. மாதத்திற்கு 150 கார்கள் என்ற அளவில்தான் இதன் விற்பனை உள்ளது. மாதத்திற்கு 15,000 கார்கள் என்ற எண்ணிக்கையை உடைய மிட்சைஸ் செடான் மார்க்கெட்டில் லீனியாவின் பங்களிப்பு வெறும் 1 சதவீதம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

04. மஹிந்திரா வெரிட்டோ வைப்

04. மஹிந்திரா வெரிட்டோ வைப்

மோசமான டிசைன்தான் இந்த காரின் விற்பனை படு பதாளத்தில் இருப்பதற்கு காரணம். மேலும், வெரிட்டோ செடான் மற்றும் வைப் ஹேட்ச்பேக் கார் என இரண்டும் சேர்ந்து மாதத்திற்து சராசரியாக வெறும் 350 கார்கள்தான் விற்பனையாகின்றன. அதுவும், வெரிட்டோ டாக்சி மார்க்கெட்டில் விற்பனையாவதால் இந்த எண்ணிக்கை. இல்லையெனில், அதுவும் இருக்காது.

05. நிசான் சன்னி

05. நிசான் சன்னி

மிட்சைஸ் செடான் மார்க்கெட்டில் ஹோண்டா சிட்டி மற்றும் மாருதி சியாஸ் காரின் விஸ்வரூபத்தால் நிசான் சன்னி காரின் மவுசு போய்விட்டது. கடந்த சில மாதங்களாக மாதத்திற்கு சராசரியாக 200 கார்களுக்கும் குறைவான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது.

06. மஹிந்திரா குவான்ட்டோ

06. மஹிந்திரா குவான்ட்டோ

4 மீட்டருக்கும் குறைவான நீளத்தில் வடிவமைக்கப்பட்ட மஹிந்திரா குவான்ட்டோவின் நிலைமையும் கவலைக்கிடமாகவே உள்ளது. மாதத்திற்கு வெறும் 100க்கும் குறைவான எண்ணிக்கையிலான குவான்ட்டோ எஸ்யூவிகளே விற்பனையாகின்றன. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் வந்ததுதான் குவான்ட்டோவின் விற்பனை கடுமையாக சரிந்து போனதற்கு காரணம்.

07. டாடா மான்ஸா

07. டாடா மான்ஸா

டாடா மான்ஸா காரின் விற்பனையும் மிக மிக மோசமான நிலையில் இருக்கிறது. மாதத்திற்கு 25 கார்கள் கூட விற்பனையாகவில்லை என்றும், கடந்த இரு மாதங்களாக முன்பதிவு கூட எடுக்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. டாடா ஆரியாவும் இந்த லிஸ்ட்டில்தான் உள்ளதாம்.

08. ஃபோர்டு ஃபியஸ்ட்டா

08. ஃபோர்டு ஃபியஸ்ட்டா

சிறந்த மாடலாக இருந்தும் ஃபோர்டு ஃபியஸ்ட்டாவின் நிலைமையும் மிக மோசமாக இருக்கிறது. மிட்சைஸ் மார்க்கெட்டில் வெறும் 2 சதவீத பங்களிப்பை மட்டுமே இந்த செடான் கார் பெற்றிருக்கிறது.

09. ரெனோ பல்ஸ்

09. ரெனோ பல்ஸ்

நிசான் மைக்ரா மற்றும் சன்னி கார்களின் ரீபேட்ஜ் மாடல்கள்தான் ரெனோ பல்ஸ் மற்றும் ஸ்காலா கார்கள். இவை இரண்டும் மிக மோசமான விற்பனையை பதிவு செய்து வருகின்றன. இரண்டு கார்களின் சராசரி மாத விற்பனை 300 கார்கள் என்ற அளவில்தான் உள்ளதாம். எனவே, இந்த செய்தித் தொகுப்பில் பார்த்த கார்களை தவிர்ப்பது நலம்.

  
English summary
Some Worst Selling Cars In India This Year.
Story first published: Wednesday, August 12, 2015, 11:17 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark