தீபாவளிக்காக ரிலீசான ஸ்பெஷல் எடிசன் கார்கள்: சிறப்புத் தொகுப்பு

By Saravana

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஓர் ஸ்திரமான காரணத்தை அடிப்படையாகக் கொண்டு, ஸ்பெஷல் எடிசன் அல்லது லிமிடேட் எடிசன் எனப்படும் சிறப்புப் பதிப்பு கார்கள் வெளியிடப்பட்டன. ஆனால், இப்போது கார்களின் எண்ணிக்கையும், சந்தைப் போட்டியும் அதிகரித்துவிட்டதால், வாடிக்கையாளர்களை கவர்வதற்கு அவ்வப்போது ஸ்பெஷல் எடிசன் மாடல்களை வெளியிடுவது கார் நிறுவனங்களுக்கு வாடிக்கையாகிவிட்டது.

ஆனாலும், இதில் வாடிக்கையாளர்களுக்கு சில அனுகூலங்களும் உள்ளன. பிரத்யேகமான பாடி ஸ்டிக்கர், குறைவான தொகையில் அதிக ஆக்சஸெரீகள் என்பன போன்றவை வாடிக்கையாளர்களை கவரும் அம்சமாக உள்ளன. அதுபோன்று, இந்த பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் வெளியிடப்பட்ட கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட கார் மாடல்களின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

டாடா ஸ்பெஷல் கார் மாடல்கள்

டாடா ஸ்பெஷல் கார் மாடல்கள்

இந்த பண்டிகை காலத்தில் அதிக சிறப்பு பதிப்பு கார் மாடல்களை வெளியிட்ட நிறுவனம் டாடா மோட்டார்ஸ்தான். ஜென்எக்ஸ் நானோ கார் துவங்கி, சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவி வரை ஸ்பெஷல் எடிசன் மாடல்களாக வெளியிடப்பட்டன. இந்த சிறப்புப் பதிப்பு கார்களில் என்னென்ன கூடுதல் ஆக்சஸெரீகள் இடம்பெற்று இருக்கின்றன மற்றும் விலை விபரத்தை அறிந்து கொள்ள கீழே உள்ள செய்தி இணைப்பை சொடுக்கவும்.

டாடா ஸ்பெஷல் எடிசன் கார்கள் விபரம்

மாருதி ஸ்விஃப்ட் க்ளோரி எடிசன்

மாருதி ஸ்விஃப்ட் க்ளோரி எடிசன்

நம் நாட்டு வாடிக்கையாளர்களின் மனம் கவர்ந்த மாருதி ஸ்விஃப்ட் காரின் சிறப்பு பதிப்பு மாடல், ஸ்விஃப்ட் க்ளோரி என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. அட்டகாசமான பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர்கள், கூடுதல் ஆக்சஸெரீகளுடன், மிக சரியான விலையில் கிடைக்கிறது. இந்த காரின் முழுமையான விபரங்களை கீழே உள்ள செய்தி இணைப்பில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

மாருதி ஸ்விஃப்ட் க்ளோரி எடிசன் விபரங்கள்

ஹூண்டாய் எலைட் ஐ20 செலிபரேஷன் எடிசன்

ஹூண்டாய் எலைட் ஐ20 செலிபரேஷன் எடிசன்

ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் ஸ்போர்ட்ஸ் வேரியண்ட்டின் அடிப்படையில் இந்த மாடல் வெளியிடப்பட்டது. 16 இன்ச் டைமன்ட் கட் அலாய் வீல்கள், கருப்பு வண்ண கூரை, ஸ்போர்ட்ஸ் பெடல்கள் போன்ற பல சிறப்பம்சங்களுடன் கிடைக்கிறது.

ஹூண்டாய் எலைட் ஐ20 செலிபரேஷன் எடிசன் விபரம்

டொயோட்டா லிவா

டொயோட்டா லிவா

டொயோட்டா லிவா காரின் லிமிடேட் எடிசன் மாடல் பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்களுடன் வெளியிடப்பட்டது. கருப்பு நிற கூரை, ரியர் ஸ்பாய்லர், 15 இன்ச் டைமன்ட் கட் அலாய் வீல்கள், ஃபேப்ரிக் இருக்கைகள் என பல்வேறு வசதிகள் கொண்டது. கூடுதல் தகவல்களை கீழே உள்ள செய்தி இணைப்பிற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

டொயோட்டா லிவா லிமிடேட் எடிசன் விபரம்

 மாருதி ஆல்ட்டோ கே10 அர்பனோ

மாருதி ஆல்ட்டோ கே10 அர்பனோ

மாருதி நிறுவனமும் இந்த ஆண்டு பண்டிகை காலத்துக்கு பல சிறப்பு பதிப்புகளை வெளியிட்டது. அதில், ஆல்ட்டோ கே10 காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் ஆல்ட்டோ கே10 அர்பனோ என்ற பெயரில் வெளியிடப்பட்டது. ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ஆம்பியன்ட் லைட் செட்டிங் என்று பல கூடுதல் சிறப்புகளை கொண்டது. முழுமையான விபரங்களுக்கு கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.

மாருதி ஆல்ட்டோ கே10 அர்பனோ எடிசன் விபரம்

ஃபியட் புன்ட்டோ எவோ ஸ்போர்ட்டிவோ

ஃபியட் புன்ட்டோ எவோ ஸ்போர்ட்டிவோ

ஃபியட் நிறுவனமும் புன்ட்டோ எவோ காரின் ஸ்பெஷல் எடிசனை அறிமுகம் செய்தது. புன்ட்டோ எவோ ஸ்போர்ட்டிவோ என்ற பெயரில் வந்த இந்த மாடலில் ஸ்பெஷல் பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் மற்றும் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்றவை கூடுதலாக சேர்க்கப்பட்டிருக்கின்றன. முழுமையானத் தகவல்களுக்கு கீழே உள்ள செய்தி இணைப்பை சொடுக்கவும்.

ஃபியட் புன்ட்டோ எவோ ஸ்போர்ட்டிவோ எடிசன்

 மாருதி வேகன் ஆர் அவான்ஸ்

மாருதி வேகன் ஆர் அவான்ஸ்

மாருதி வேகன் ஆர் காரின் எல்எக்ஸ்ஐ பேஸ் வேரியண்ட்டில் கூடுதல் வசதிகளை சேர்த்து மாருதி வேகன் ஆர் அவான்ஸ் என்ற பெயரில் ஸ்பெஷல் மாடலாக வெளியிடபப்பட்டது. ஸ்பெஷல் பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர், இரட்டை வண்ண டேஷ்போர்டு, ரியர் பவர் விண்டோஸ் போன்ற பல வசதிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. முழுமையான விபரங்களுக்கு கீழே உள்ள செய்தி இணைப்பை சொடுக்கவும்.

மாருதி வேகன் ஆர் அவான்ஸ் எடிசன் விபரம்

ரெனோ டஸ்ட்டர் எக்ஸ்ப்ளோர்

ரெனோ டஸ்ட்டர் எக்ஸ்ப்ளோர்

ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியில் கூடுதலாக பல சிறப்பம்சங்களை சேர்த்து ரெனோ டஸ்ட்டர் எக்ஸ்ப்ளோர் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடலின் முழுமையான தகவல்களுக்கு கீழே உள்ள செய்தி இணைப்பை சொடுக்கவும்.

ரெனோ டஸ்ட்டர் எக்ஸ்ப்ளோர் எடிசன் விபரம்

கார்களுக்கு வழங்கப்படும் தீபாவளி ஆஃபர்கள் விபரம்

கார்களுக்கு வழங்கப்படும் தீபாவளி ஆஃபர்கள் விபரம்

More from DriveSpark

Article Published On: Friday, November 6, 2015, 14:03 [IST]
English summary
Here is a list of some special edition vehicles that are on sale currently during Diwali.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+