சாங்யாங் டிவோலி எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்கும் மஹிந்திரா!
இந்தியாவில், சாங்யாங் டிவோலி காம்பேக்ட் எஸ்யூவியை விரைவில் களமிறக்குவதற்கு மஹிந்திரா திட்டமிட்டிருக்கிறது. இந்தியாவிற்கு ஏற்ப மாறுதல்களை செய்வதற்காக சாங்யாங் டிவோலி எஸ்யூவி இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது.
எனவே, விரைவில் இந்த புதிய மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தோற்றத்திலும், வசதிகளிலும் அட்டாகசமான இந்த மாடலுக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

காம்பேக்ட் எஸ்யூவி மாடல்
சாங்யாங் நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடல்தான் டிவோலி. கடந்த சில மாதங்களுக்கு முன் தென்கொரியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட இந்த புதிய எஸ்யூவி மாடல் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் விற்பனைக்கு செல்ல இருக்கிறது.

எஞ்சின் ஆப்ஷன்கள்
சர்வதேச அளவில் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனுடன் விற்பனைக்கு செல்கிறது. ஆனால், இந்தியாவில் மஹிந்திரா டியூவி 300 எஸ்யூவியில் இருக்கும் 1.5 லிட்டர் எம்ஹாக் 80 டீசல் எஞ்சினுடன் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அசெம்பிள்
முக்கிய பாகங்களாக தருவிக்கப்பட்ட இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்படும். இதன்மூலம், போட்டியாளர்களுக்கு சவாலான விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அறிமுகம் எப்போது?
அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த புதிய சாங்யாங் டிவோலி எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டியாளர்கள்
ரெனோ டஸ்ட்டர், ஹூண்டாய் க்ரெட்டா உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுடன் இந்த புதிய சாங்யாங் டிவோலி போட்டி போடும்.

எதிர்பார்க்கும் விலை
தென்கொரியாவில் விற்பனைக்கு வந்துவிட்ட இந்த புதிய எஸ்யூவி மாடல் இந்திய மதிப்பில் ரூ.9.31 லட்சம் ஆரம்ப விலையில் கிடைக்கிறது. இதே விலை பட்டியலில் இந்தியாவிலும் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








