மாருதி பிரிமியம் ஹேட்ச்பேக் காரின் உற்பத்தி துவங்கியது!

Written By:

மாருதி நிறுவனத்தின் புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் காரின் உற்பத்தி துவங்கியிருக்கிறது. ஹரியானா மாநிலம், குர்கானில் உள்ள மாருதி கார் ஆலையின் உற்பத்தி பிரிவிலிருந்து இந்த புதிய கார் வெளிவந்தபோது எடுக்கப்பட்ட படங்கள் வெளியாகியுள்ளன.

சுஸுகி பெலெனோ என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த புதிய கார் வரும் 15ந் தேதி பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனிடையே, இந்தியாவில் இந்த காரின் உற்பத்தி துவங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த காரின் ஸ்பை படங்களை ஸ்லைடரில் காணலாம்.

பிரிமியம் மாடல்

பிரிமியம் மாடல்

மாருதி ஒய்ஆர்ஏ என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் இந்த கார் மாருதியின் நெக்ஸா பிரிமியம் ஷோரூம் வழியாக விற்பனை செய்யப்பட உள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த புதிய காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் மட்டுமின்றி, சுஸுகியின் 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் பெட்ரோல் எஞ்சினுடன் வர இருக்கிறது. இந்தியாவில், சுஸுகியின் 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் பெட்ரோல் எஞ்சினுடன் வரும் முதல் கார் மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வசதிகள்

வசதிகள்

புரொஜெக்டர் ஹெட்லைட், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்றவை இடம்பெற்றிருப்பது ஸ்பை படங்கள் மூலம் தெரிய வருகிறது. எனவே, வசதிகளிலும் இது உயர்வகை ஹேட்ச்பேக் கார் மாடலாகவே இருக்கும்.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

அனைத்து வேரியண்ட்டுகளிலும் டியூவல் ஏர்பேக்ஸ் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இடம்பெற்றிருக்கும். டாப் வேரியண்ட்டில், 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரெயின் சென்சிங் வைப்பர்கள், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்ஸ் போன்றவையும் இடம்பெற்றிருக்கும்.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ரூ.7.50 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

ஹூண்டாய் எலைட் ஐ20, ஹோண்டா ஜாஸ் மற்றும் ஃபோக்ஸ்வேகன் போலோ கார்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

 
English summary
Suzuki Baleno (YRA) premium hatchback car Production has commenced in India.
Story first published: Wednesday, September 9, 2015, 17:16 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos