கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற சுஸுகி எஸ் க்ராஸ்!
ஆசிய என்சிஏபி அமைப்பு நடத்திய கிராஷ் டெஸ்ட்டில் சுஸுகி எஸ் க்ராஸ் காருக்கு 5 நட்சத்திர அந்தஸ்தை பெற்றிருக்கிறது.
ஆசிய என்சிஏபி அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, எஸ்யூவி வகையில் அதிகபட்சக புள்ளிகளை பெற்று பாதுகாப்பு அம்சங்களில் முதல் இடத்தையும் பெற்றிருக்கிறது.

எஸ் க்ராஸ் மாடல்
மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் விற்பனைக்கு செல்லும் சுஸுகி எஸ் க்ராஸ் மாடல்தான் கிராஷ் டெஸ்ட்டிற்கு பயன்படுத்தப்பட்டது. சுஸுகியின் ஹங்கேரி ஆலையில் தயாரிக்ப்படும் மாடல் அது. இதே மாடல்தான் சில மாற்றங்களுடன் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. மானேசரில் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள்
ஆசிய என்சிஏபி முன்புறத்திற்கான டியூவல் ஏர்பேக்ஸ் உள்பட 7 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட எஸ் க்ராஸ் எஸ்யூவி கிராஷ் டெஸ்ட்டிற்கு உட்படுத்தப்பட்டது.

5 ஸ்டார் ரேட்டிங்
மணிக்கு 63 கிமீ வேகத்தில் மோதச் செய்து எஸ் க்ராஸ் சோதனை செய்யப்பட்டது. பெரியவர்களுக்கான பாதுகாப்பு தரத்தில் 5க்கு 5 என்ற அதிகபட்ச தர அந்தஸ்தையும், சிறியவர்களுக்கான பாதுகாப்பில் 5க்கும் 4 என்ற தர அந்தஸ்தையும் பெற்றிருக்கிறது. .

முதல் இடம்
கிராஷ் டெஸ்ட்டில் அதிகபட்சம் 16 புள்ளிகளுக்கு 15.48 புள்ளிகளை எஸ் க்ராஸ் பெற்றது. இதில், கவனிக்க வேண்டிய விஷயம், ஹோண்டா சிஆர்வி (15.46/16) எஸ்யூவியைவிட சற்று கூடுதல் புள்ளிகளை பெற்ற எஸ்யூவி ரகத்தில் அதிக பாதுகாப்பு கொண்ட மாடல் என்ற பெருமையை எஸ் க்ராஸ் பெற்றிருக்கிறது

அறிமுகம்
அடுத்த மாத இறுதியில் புதிய மாருதி எஸ் க்ராஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. அடுத்த ஸ்லைடில் கிராஷ் டெஸ்ட் வீடியோ.
கிராஷ் டெஸ்ட் வீடியோ
சுஸுகி எஸ் க்ராஸ் கிராஷ் டெஸ்ட் வீடியோவை காணலாம்.


Click it and Unblock the Notifications







