நாளை விற்பனைக்கு வருகிறது புதிய டாடா போல்ட் கார்!
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய டாடா போல்ட் ஹேட்ச்பேக் கார் நாளை விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
பெட்ரோல், டீசல் என இரண்டு எரிபொருள் வகையிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. பெட்ரோல் மாடலில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய 1.2 லிட்டர் ரெவோட்ரான் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சினின் செயல்திறனை மூன்றுவிதமாக மாற்றிக் கொள்ளும் வசதியுடன் வருகிறது.

டீசல் மாடலில் 1.3 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இதுதவிர, பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்கள், புத்தம் புதிய டிசைன் என வாடிக்கையாளர்களை காக்க வைத்திருக்கிறது.
ரூ.3.90 லட்சம் முதல் ரூ.4.20 லட்சத்திற்கு இடையிலான ஆரம்ப விலையில் இந்த புதிய கார் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








