லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் அடிப்படையில் உருவாகும் டாடா எஸ்யூவி!
டாடா - லேண்ட்ரோவர் நிறுவனங்களின் கூட்டணியில் டாடா மோட்டார்ஸ் பிராண்டுக்காக புதிய பிரிமியம் எஸ்யூவி வடிவமைக்கப்பட்டு வருகிறது.
டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவிக்கு மேலாக நிலைநிறுத்தப்பட இருக்கும் இந்த புதிய எஸ்யூவி மாடல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த புதிய எஸ்யூவி குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

குறியீட்டுப் பெயர்
லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு வரும் இந்த புதிய எஸ்யூவி Q501 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படுகிறது.
குறிப்பு: மாதிரிக்காக டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவியின் படங்கள் ஸ்லைடுகளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

டிஸ்கவரி ஸ்போர்ட் சேஸீ
இந்த புதிய எஸ்யூவியின் சேஸீ மற்றும் அடிப்பாகம் மட்டும் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவியிலிருந்து எடுத்து பயன்படுத்தப்படும். மற்றபடி, தோற்றம் மற்றும் எஞ்சின் ஆகியவை முற்றிலும் வேறுபட்டு இருக்கும்.

ஃபியட் எஞ்சின்
இந்த புதிய எஸ்யூவியில் ஃபியட் நிறுவனத்தின் 2.0 லிட்டர் மல்டிஜெட்- 2 எஞ்சின் பயன்படுத்தப்பட உள்ளது. இது 150 எச்பி முதல் 175 எச்பி இடையிலான பவர் கொண்டதாக இருக்கும். இந்த எஞ்சின் இறக்குமதி செய்து பொருத்தப்பட இருப்பதால், புதிய டாடா எஸ்யூவியின் விலையும் சற்று அதிகமிருக்கும் என தெரிகிறது.

எஞ்சின் உற்பத்தி
ஜீப் பிராண்டு எஸ்யூவிகளுக்காக இந்த எஞ்சினை ரஞ்சன்கானிலுள்ள ஆலையில் ஃபியட் உற்பத்தி செய்யும்போது விலை குறைவாக சப்ளை செய்வதற்கான வாய்ப்பு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு கிடைக்கும்.

விலை
ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சம் இடையிலான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

போட்டியாளர்கள்
இந்த புதிய டாடா எஸ்யூவி டொயோட்டா ஃபார்ச்சூனர் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுக்கு இணையாக நிலைநிறுத்தப்பட உள்ளது.
குறிப்பு: மாதிரிக்காக டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவியின் படங்கள் ஸ்லைடுகளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications








