புதிய டாடா எஸ்யூவி கான்செப்ட் மாடல் அறிமுகம்- படங்களுடன், விபரம்

By Saravana

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எஸ்யூவி கான்செப்ட் ஜெனீவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. டாடா ஹெக்ஸா என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த கான்செப்ட் தற்போது இந்தியாவில் இருக்கும் ஆரியா காரின் அடிப்படையில் உருவான மாடல் என்பதை பார்த்தவுடனே கூறிவிடலாம்.

ஆரியா அடிப்படையிலான இந்த எஸ்யூவி கான்செப்ட் மாடல் பற்றிய கூடுதல் தகவல்கள் மற்றும் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

வடிவம்

வடிவம்

டாடா ஹெக்ஸா எஸ்யூவி 4,764 மிமீ நீளம், 1,895 மிமீ அகலம் மற்றும் 1,780 மிமீ உ.யரம் கொண்டதாக வடிவைக்கப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவி 2,850 மிமீ வீல் பேஸ் கொண்டிருப்பதால் மிகச்சிறப்பான இடவசதியை கொண்டதாக உள்ளது.

டிசைன் அம்சங்கள்

டிசைன் அம்சங்கள்

ஆரியாவின் டிசைனில் மாற்றங்களையும், கூடுதல் ஆக்சஸெரீகளையும் சேர்த்து இந்த எஸ்யூவியை வெளிக்கொணர்ந்துள்ளனர். புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், பகல்நேர ரன்னிங் விள்ககுகள், தேன்கூடு வடிவ முன்பக்க க்ரில் அமைப்பு, புதிய ஏர்டேம் ஆகியவை குறிப்பிட்டு கூறவேண்டிய மாற்றங்கள்.

பின்புற டிசைன் அம்சங்கள்

பின்புற டிசைன் அம்சங்கள்

எல்இடி டெயில் லைடடுகள், புதிய பம்பர், ஸ்பாயலர், 19 இன்ச் அலாய் வீல்கள் ஆகியவை பின்புறம் மற்றும் பக்கவாட்டு டிசைன் சிறப்பம்சங்களாக கூறலாம்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த புதிய எஸ்யூவியில் 154 பிஎச்பி., பவரை அதிகபட்சமாக அளிக்கும் வல்லமை கொண்ட 2.2 லிட்டர் வேரிகோர் டீசல் எஞ்சின் உள்ளது. டெர்ரெய்ன் ரெஸ்பான்ஸ் சிஸ்டமும் கொண்டது.

6 சீட்டர்

6 சீட்டர்

இந்த எஸ்யூவி மூன்று வரிசை இருக்கை அமைப்பை கொண்டிருக்கிறது. டிரைவரை சேர்த்து ஒரு வரிசையில் தலா 2 பேர் வீதம் 6 பேர் வசதியாக அமர்ந்து பயணிக்கலாம். இந்த எஸ்யூவி கான்செப்ட் மாடலுடன், டாடா போல்ட் காரின் 120 பிஎச்பி மாடலும் ஜெனீவா மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 3, 2015, 16:22 [IST]
English summary
Tata Motors has unveiled a new SUV concept, the Hexa at the ongoing 2015 Geneva Motor Show.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+