இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வருகிறது டாடா ஹெக்ஸா எஸ்யூவி!

By Saravana

இந்த ஆண்டு இறுதியில் டாடா ஹெக்ஸா எஸ்யூவி மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த தகவலை CNBC-TV18 தொலைக்காட்சி மூலமாக டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனப் பிரிவு தலைவர் மாயங்க் பரீக் வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் நடந்த ஜெனீவா மோட்டார் ஷோவில், டாடா ஹெக்ஸா எஸ்யூவியின் கான்செப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த எஸ்யூவி இன்னும் சில மாதங்களில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

உருமாறிய ஆரியா

உருமாறிய ஆரியா

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆரியா எம்பிவி காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருப்பதால், அதிக ஒற்றுமைகள் தெரிகின்றன. ஆனால், இதனை ஒரு புத்தம் புதிய மாடல் என்று டாடா மோட்டார்ஸ் கூறுகிறது.

வீல் பேஸ்

வீல் பேஸ்

டாடா ஹெக்ஸா எஸ்யூவி 4,764 மிமீ நீளமும், 1,895 மிமீ அகலமும், 1,780 மிமீ உ.யரமும் கொண்டதாக வடிவமைத்துள்ளனர். இந்த எஸ்யூவி 2,850 மிமீ வீல் பேஸ் கொண்டிருப்பதால் மிகச்சிறப்பான உட்புற இடவசதியை கொண்டிருக்கும்.

உலகத்தரம் வாய்ந்த மாடல்

உலகத்தரம் வாய்ந்த மாடல்

இதனை ஓர் உலகத் தரம் வாய்ந்த அம்சங்கள் கொண்ட எஸ்யூவி மாடலாக டாடா மோட்டார்ஸ் தெரிவிக்கிறது. ஆரியாவின் டிசைனில் மாற்றங்களையும், கூடுதல் ஆக்சஸெரீகளையும் சேர்த்து இந்த எஸ்யூவியை வெளிக்கொணர்ந்துள்ளனர். புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், பகல்நேர ரன்னிங் விள்ககுகள், தேன்கூடு போன்ற முன்பக்க க்ரில் அமைப்பு, புதிய ஏர்டேம் ஆகியவை குறிப்பிட்டு கூறவேண்டிய மாற்றங்கள்.

 எஞ்சின்

எஞ்சின்

இந்த புதிய எஸ்யூவியில் அதிகபட்சமாக 154 பிஎச்பி., பவரையும் 400 என்எம் டார்க்கையும் அளிக்கும் வல்லமை கொண்ட 2.2 லிட்டர் வேரிகோர் டீசல் எஞ்சின் உள்ளது. கான்செப்ட் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருந்தது. ஆனால், விற்பனைக்கு வரும் தயாரிப்பு நிலை மாடலில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெர்ரெய்ன் ரெஸ்பான்ஸ் சிஸ்டமும் கொண்டது.

 இருக்கை அமைப்பு

இருக்கை அமைப்பு

இந்த எஸ்யூவி மூன்று வரிசை இருக்கை அமைப்பை கொண்டிருக்கிறது. டிரைவரை சேர்த்து ஒரு வரிசையில் தலா 2 பேர் வீதம் 6 பேர் வசதியாக அமர்ந்து பயணிக்கலாம்.

அம்சங்கள்

அம்சங்கள்

கருப்பு நிற இன்டிரியர், டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மூட் லைட் சிஸ்டம், இரட்டை தையல் போடப்பட்ட லெதர் இருக்கைகள், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் மற்றும் வைப்பர்கள், எல்இடி டெயில் லைட்டுகள், 19 இன்ச் அலாய் வீல்களுடன் வருகிறது. 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற முக்கிய பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றிருக்கும்.

Most Read Articles
English summary
Tata To Launch Hexa crossover in India later this year.
Story first published: Thursday, June 4, 2015, 13:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X