டாடா கைட் காரின் புதிய நாமகரணம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

By Ravichandran

விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் டாடா நிறுவனத்தின் புதிய ஹேட்ச்பேக் காருக்கு, டாடா ஸீக்கா என்று பெயரிடபட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு தான் டாடா கைட் என்று இதுவரை அழைக்கப்பட்டு வந்த இந்த காரின் ஸ்கெட்ச் எனப்படும் மாதிரிப்படத்தை வெளியிட்டனர். தற்போது, இந்த புதிய காரின் பெயரினை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

வகைப்படுத்தல்;

வகைப்படுத்தல்;

டாடா மோட்டர்ஸ் நிறுவனத்தின் புதிய ஹேட்ச்பேக்கான டாடா ஸீக்கா என பெயர் மாற்றபட்டுள்ள தி கைட், செக்மெண்ட் ரீதியாவும், திறன் ரீதியாகவும், போல்ட் காருக்கும் கீழே நிலைநிறுத்தப்படும்.

டாடா ஹரிஸான் நெக்ஸ்ட் என்ற கொள்கை திட்டத்தின் கீழ், டாடா ஸெஸ்ட், டாடா போல்ட் ஆகிய கார்களுககு அடுத்து, இந்த ஸீக்கா, மூன்றாவது மாடலாக அறிமுகம் செய்யபடுகிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

டாடா ஸீக்கா, தேர்வு முறையிலான பெட்ரோல் மற்றும் டீசல் இஞ்ஜின் வசதிகளுடன் கிடைக்கும்.

3 சிலிண்டர்கள் கொண்ட புதிய 1.05 லிட்டர் டீசல் இஞ்ஜின் கொண்டுள்ளது. இது 67 பிஹெச்பி-யை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

3 சிலிண்டர்கள் கொண்ட, 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் 84 பிஹெச்பி-யை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கைட் காருக்கான போட்டி கார்கள்;

கைட் காருக்கான போட்டி கார்கள்;

தி டாடா ஸீக்கா மாடல் கார், ஹூண்டாய் இயான், மாருதி சுசுகி ஆல்டோ, மற்றும் சமீபத்தில் அறிமுகம் செய்யபட்ட ரெனாட் க்விட் கார்களுடன் போட்டியை எதிர் கொள்ள உள்ளது.

புதிய அம்சங்கள்;

புதிய அம்சங்கள்;

டாடா ஸீக்கா புதிய சஸ்பென்ஷன் சிஸ்டத்தை பயன்படுத்தியுள்ளது.

இது, தற்போது பெரும்பாலான நவீன ஹேட்ச்பேக்களில் காணப்படும், கன்வென்ஷனல் நான் - இண்டிபெண்டண்ட், ட்விஸ்ட் பீம் ஆக்ஸில் கொண்டுள்ளது.

இதற்கு காரணம், முதல் தலைமுறை டாடா இண்டிகா காருக்கு பொருத்தபட்ட ஃபுல்லி-இண்டிபெண்டண்ட் ரியர் சஸ்பென்ஷன் சிஸ்டம், வாடிக்கையாளர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

டாடா ஸீக்கா தொடர்பான வீடியோ;

டாடா ஸீக்கா, அதன் மாற்றபட்ட பெயர் சூட்டபடுவதற்கு முன்பு, விளம்பர நடவடிக்கைகளுக்காக, உபயோகிக்கபட்ட வீடியோவை காணலாம்.

டாடா ஸீக்கா தொடர்பான செய்திகள்;

டாடா ஸீக்கா தொடர்பான செய்திகள்;

டாடா ஸீக்கா, தொடர்பான செய்திகளை காண...

More from DriveSpark

Article Published On: Tuesday, November 24, 2015, 16:10 [IST]
English summary
Tata Motors has officially named their upcoming hatchback kite as the 'Tata Zica'. Tata Motors recently released the sketch of this upcoming hatchback a few days ago. Under the Tata's HorizoNext campaign, the Tata Zica hatchback will be the third product, after the Tata Zest and the Bolt.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+