நாட்டிலேயே முதலாவது டாடா 'பஸ் ஸோன்' சென்னையில் திறப்பு!

Written By:

பஸ் விற்பனை மற்றும் பஸ் சர்வீஸுக்கான பிரத்யேகமான முதல் ஷோரூமை சென்னையில் திறந்திருக்கிறது டாடா மோட்டார்ஸ்.

Tata Bus Zone என்ற பெயரில் திறக்கப்பட்டிருக்கும் இந்த முதல் பிரத்யேக டாடா பஸ் ஷோரூமை ஜன்தா குழுமம் அமைத்துள்ளது. இது பஸ் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கான ஒருங்கிணைந்த சேவைகளை வழங்கும் மையமாக செயல்படும்.

 ஷோரூம் அமைவிடம்

ஷோரூம் அமைவிடம்

சென்னை, அரும்பாக்கத்தில் இந்த டாடா பஸ் ஸோன் ஷோரூம் அமைந்துள்ளது. 572 சதுர மீட்டர் வளாகத்தில் 279 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த ஷோரூம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், 111 சதுர மீட்டர் பரப்பளவுக்கு பஸ்களை காட்சிக்கு நிறுத்துமிடம் உள்ளது.

ஷோரூம் சிறப்புகள்

ஷோரூம் சிறப்புகள்

முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட்டிருக்கிறது. ஷோரூம் வளாகத்தில் வைஃபை இன்டர்நெட் வசதியும் செய்யப்பட்டிருக்கிறது. பயிற்சி பெற்ற விற்பனை பிரதிநிதிகள் மூலமாக பஸ் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து தகவல்களும் வழங்கப்படும். வாடிக்கையாளர்கள், ஓட்டுனர்களுக்கான ஓய்வு அறையும் உள்ளது.

இதர வசதிகள்

இதர வசதிகள்

வாடிக்கையாளற்களுக்கு தேவையான கடனுதவி திட்டங்கள், வாகன காப்பீடு, பராமரிப்பு திட்டங்கள், 24 மணி நேர சாலை உதவி திட்டங்கள் என அனைத்தையும் ஒரே இடத்தில் வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

 சர்வீஸ் மையம்

சர்வீஸ் மையம்

சென்னை - பெங்களூர் சாலையில் சர்வீஸ் மையம் அமைந்துள்ளது. ஒரேநேரத்தில், 12 பஸ்களை பழுது நீக்குவதற்கான வசதியை கொண்டுள்ளது. பயிற்சி பெற்ற மெக்கானிக்குகள் மூலமாக சிறப்பான சர்வீஸ் வசதியை பெற முடியும். விரைவாகவும், நிறைவாகவும் சர்வீஸ் செய்து கொள்வதற்கான வசதியை இந்த பிரத்யேக சர்வீஸ் மையம் வழங்கும்.

சேவை விரிவாக்கம்

சேவை விரிவாக்கம்

திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பஸ் வாடிக்கையாளர்களுக்கு தேவையான விற்பனை, சர்வீஸ் மற்றும் ஸ்பேர் பார்ட்ஸ் தேவைகளை டாடா பஸ் ஸோன் மூலமாக சேவைகளை வழங்க உள்ளதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

 
English summary
Tata Motors has inaugurated BusZone, the company’s first exclusive bus range dealership, in Arumbakkam, Chennai. BusZone is an air-conditioned facilitystrategically located in the city center, with a dedicated bus display area, staffed by professional sales and service teams, offering dedicated bus services, with a customer lounge, conference rooms, including Wi-Fi connectivity.
Story first published: Saturday, October 24, 2015, 9:20 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark