டாடா மோட்டார்ஸ் மெகா சர்வீஸ் முகாம் நவ.20ல் துவங்குகிறது
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மெகா சர்வீஸ் முகாம் நவம்பர் 20-ஆம் தேதி துவங்குகிறது.
இந்த மெகா சர்வீஸ் கேம்ப் இந்தியா முழுவதும், பயணியர் வாகன வாடிக்கையாளர்களுக்காக நடத்தபட உள்ளது. இது நவம்பர் 20-ஆம் தேதி முதல் நவம்பர் 26-ஆம் தேதி வரை நடை பெற உள்ளது.
விரிவான மற்றும் இலவசமாக நடத்தப்படும் முழு வாகன பரிசோதனை முகாம்கள் 287 நகரங்களில் உள்ள டாடா மோட்டார்ஸ் டீலர்ஷிப்களிலும், அங்கீகரிக்கபட்ட சர்வீஸ் மையங்களிலும் நடத்தப்பட உள்ளது. இந்த முகாமின் சேவைகளை மேலும் விரிவாக வழங்கும் நோக்கத்தில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. இந்த ஒத்துழைப்பு மூலம், இந்தியன் ஆயிலின் தேர்ந்தெடுக்கபட்ட பெட்ரோல் பங்க்கள் உட்பட நாடு முழுவதிலும் சுமார் 1,000 இடங்களில், டாடா மோட்டார்ஸின் இந்த சர்வீஸ் கேம்ப் நடத்தப்பட உள்ளது.
இதோடு மட்டுமில்லாமல், டாடா மோட்டார்ஸ் நிறுவனம், 16 சப்ளையர்களுடன் இணைந்துள்ளனர். இந்த சப்ளையர்கள், ஆக்சஸரீஸ், பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள், எண்ணெய் மற்றும் லூப்ரிகண்டுகள் உள்ளிட்டவற்றிற்கு 10 சதவிகிதம் வரை சலுகைகள் வழங்குகின்றனர்.
மெகா சர்வீஸ் கேம்ப்பில், வாடிக்கையாளர்களுக்கு கிடைக்க இருக்கும் வேறு சலுகைகள் குறித்த பட்டியலை பார்ப்போம்;
(*) டாடா மோட்டார்ஸ் ஒரிஜினல் பாகங்கள் மற்றும் லேபர் கட்டணங்களில் 20 சதவிகிதம் தள்ளுபடி
(*) வேல்யூ கேர் (கோல்ட் ஏஎம்சி) கட்டணத்தில் 699 ரூபாய் தள்ளுபடி
(*) எக்ஸ்டெண்டட் (விரிவாக்கபட்ட) வாரண்டி ரீடெய்ல் பாலிசியின் மீது 1,000 ரூபாய் தள்ளுபடி
(*) புதிய பேட்டரிகள் மீது 1,000 ரூபாய் வரை தள்ளுபடி
(*) டாடா கார்களின் எக்ஸ்சேஞ்ஜ் புரோக்ராம் (எக்ஸ்சேஞ்ஜ் திட்டம்) திட்டத்தில் சிறப்பு ஆஃபர்கள்
(*) ரோட்ஸைட் அசிஸ்டன்ஸ் ரீடெய்ல் பாலிசி (சாலையோர உதவி திட்டம்)
(*) ஈர்க்கும் வகையிலான இன்ஷூரன்ஸ் ரென்யூவல் (புதுப்பிப்பு) ஆஃபர்கள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கபட உள்ளது.
இந்த சர்வீஸ் கேம்ப் குறித்து, டாடா மோட்டர்ஸ் நிறுவனத்தின் பயணியர்கள் வாகன வர்த்தக பிரிவு தலைமை அதிகாரியான மயான்க் பரீக் மிகுந்த பெருமிதத்தை வெளிபடுத்தினார். வாடிக்கையாளர்களுக்கு இன்னும் கூடுதலான சேவைகளை வழங்குவதற்காக, இந்த மெகா சேவை முகாமின் மூன்றாவது கட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளது என மயான்க் கூறினார்.
கடந்த இரண்டு சர்வீஸ் கேம்ப்களில் கிடைத்த வெற்றிகளால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தங்களின் விரிந்த சர்வீஸ் நெட்வர்க் மற்றும் ஆஃபர்கள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு எடுத்து உணர்த்த உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சேவைகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல டாடா நிறுவனம் முனைப்புடன் இருப்பதாக தெரிகிறது.
மேலும், வாடிக்கையாளர்களும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடத்தும் இத்தகைய சர்வீஸ் கேம்ப்களின் சேவைகளை அங்கிகரித்துள்ளதாக தெரிகிறது. சமீப காலத்தில், வெளியிடப்பட்ட ஜேடி பவர் சிஎஸ்ஐ 2015 என்ற கருத்துகணிப்பில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மூன்றாவது இடத்திற்கு உயர்ந்துள்ளதாக தெரிகிறது.

இந்த மெகா சர்வீஸ் கேம்ப், இந்த ஆண்டில் நடத்தபடும் மூன்றாவது கேம்ப் என்பது குறிப்பிடதக்கது. கடந்த இரண்டு சர்வீஸ் கேம்ப்களில் டாடா நிறுவனம் 2.25 லட்சம் கார்களை சர்விஸ் வழங்கியுள்ளது. கடந்த ஆண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பல்வேறு முன்னோடி திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
இத்தகைய முன்னோடியாக விளங்கும் திட்டங்களை மேற்கொண்டதன் மூலம், ஜேடி பவர் இண்டியா கஸ்டமர் சர்வீஸ் இண்டெக்ஸ் (சிஎஸ்ஐ) என்னும் 2015 ஆண்டு ஆய்வில், டாடா மோட்டர்ஸ் நிறுவனம் 7-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தங்களின் டீலர்ஷிப்கள் மூலமாகவும், இணை நிறுவனங்கள் மூலமாகவும், வாடிக்கையாளர்கள் நன்மை பயக்க கூடிய பல்வேறு திட்டங்களில் வரும் காலங்களில் தொடர்ந்து மேற்கொள்ள இருப்பதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications








