ராணுவத்தின் 900 கோடி மதிப்புடைய ஆர்டரை 'லபக்'கிய டாடா மோட்டார்ஸ்!
ராணுவத்திற்கு மல்டி பர்பஸ் டிரக்குகளை சப்ளை செய்வதற்கான 914 கோடி மதிப்புடைய ஆர்டரை டாடா மோட்டார்ஸ் பெற்றிருக்கிறது.
இந்த புதிய ஆர்டரின்படி, 1,239 பல்வகை பயன்பாடு கொண்ட டிரக்குகளை டாடா மோட்டார்ஸ் சப்ளை செய்ய உள்ளது.

இந்த டிரக்குகள் 6 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாகவும், அனைத்து சாலை நிலைகளிலும் செல்லத்தக்க தகவமைப்புகளையும் பெற்றிருக்கும்.
கடந்த 25 மாதங்களாக இந்த டிரக் ஆராய்ச்சி மையத்தின் சோதனை களங்களில் வைத்து பல்வேறு கடினமான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது. அதில், சிறப்பாக செயல்பட்டதையடுத்து, ஆர்டர் வழங்கப்பட்டிருக்கிறது.
கிரேன் பொருத்தப்பட்ட மாடல் ராணுவ தளவாட மற்றும் சரக்கு போக்குவரத்திற்கும், சிறிய ரக ஏவுகணைகளை ஏவுவதற்கான தளமாகவும் இந்த டிரக்குகள் பல்வேறு பயன்பாடுகளில் ஈடுபடுத்தப்பட உள்ளது. அடுத்த 24 மாதங்களில் இந்த டிரக்குகள் சப்ளை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நம் நாட்டு ராணுவத்திடமிருந்து உள்நாட்டை சேர்ந்த வாகன நிறுவனத்துக்கு கிடைத்த மிகப்பெரிய ஆர்டர்களில் ஒன்றாக இது தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications








