‘தி ஃபெண்டாஸ்டிகோ ஹண்ட்’ பிரச்சாரம் மூலம் டாடா ஸீக்கா பெயர் வெளியீடு

By Ravichandran

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தங்கள் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான, டாடா ஸீக்காவை, 'தி ஃபெண்டாஸ்டிகோ ஹண்ட் - The #Fantastico Hunt' என்ற வித்தியாசமான பிரச்சார நடவடிக்கை மூலம் வெளியிட்டனர்.

4 நகரங்களில் இருக்கும் கார் ஆர்வலர்கள், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பை வெளியிட்டனர். டாடா மோட்டார்ஸ் நிறுவனம், இதற்காக ஆன்லைனிலும், களத்திலும், 'க்ளூ ஹண்ட்' எனப்படும் துப்பு கொடுத்து புதையலை தேடும் விளையாட்டு பாணியிலான பரிசுப் வேட்டையை நடத்தியது.

'தி ஃபெண்டாஸ்டிகோ ஹண்ட் - The #Fantastico Hunt' என்ற இந்த பிரச்சார நடவடிக்கைகள், எப்படி மேற்கொள்ளபட்டது என்பதை, வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

4 நகரங்களில் பிரச்சாரம்;

4 நகரங்களில் பிரச்சாரம்;

டாடா ஸீக்காவிற்கான இந்த ‘தி ஃபெண்டாஸ்டிகோ ஹண்ட் - The #Fantastico Hunt', கள அளவில் மும்பை, டெல்லி, பெங்களூரூ, மற்றும் கொல்கத்தாவில் நடத்தபட்டது.

ஆன்லைன் அளவில், இது இந்தியா முழுவதும் நடத்தபட்டது.

1 நகரத்தில், 1 எழுத்து;

1 நகரத்தில், 1 எழுத்து;

டாடாவின் ‘ஸீக்கா', ஆங்கில எழுத்துகள் படி, இசட், ஐ, சி, ஏ என்ற நான்கு எழுத்துகள் கொண்டுள்ளது.

அந்த வகையில், இந்த 4 நகரங்களில், 1 நகரில் 1 எழுத்து என்ற வகையில், 4 எழுத்துகளுக்கான துப்புகள் வைக்கபட்டிருந்தது.

இவ்வாறாக, இந்த 4 நகரங்களிலும், ஆன்லைனிலும் நடத்தபட்ட பிரச்சாரம் மக்களிடையே ஆவலை அதிகரித்து கொண்டிருந்தது.

‘தி ஃபெண்டாஸ்டிகோ ஹண்ட் - The #Fantastico Hunt' என்ற இந்த பிரச்சார நடவடிக்கை, ஸீக்காவின் ‘இட்ஸ் ஃபெண்டாஸ்டிகோ-"It's #Fantastico!"' என்ற தீம் அடிப்படையில் நடத்தபட்டது.

பிரச்சாரம் நடத்தியவர்கள்;

பிரச்சாரம் நடத்தியவர்கள்;

டாடாவின் ‘ஸீக்கா' காருக்கான ‘தி ஃபெண்டாஸ்டிகோ ஹண்ட் - The #Fantastico Hunt' என்ற இந்த பிரச்சார நடவடிக்கை கள அளவில் விஸ்கிராஃப்ட் என்ற நிறுவனதாலும், ஆன்லைன் அளவில், டிஜிட்டாஸ் எல்பிஐ என்ற நிறுவனம் மூலமும் நடத்தபட்டது.

கள பரபரப்பு;

கள பரபரப்பு;

‘தி ஃபெண்டாஸ்டிகோ ஹண்ட் - The #Fantastico Hunt' பிரச்சாரம் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 4 நகரங்களில் பங்கேற்றவர்கள், நகரின் பல முக்கிய இடங்களில் தேடியவாறு, பல தேடல்களுக்கு பிறகு, அந்தந்த நகரில் வைக்கபட்டிருந்த எழுத்துகள் இருந்த இடத்திற்கு சென்றடைந்தனர்.

‘ஃபெண்டாஸ்டிகோ பம்ப்கின் ஸ்பைஸ் லாட்டே' காஃபிக்காக புகழ்வாய்ந்த மும்பையில் உள்ள முதல் ஸ்டார்பக்ஸ், டெல்லியின் முக்கியமான இடங்களில் ஒன்றான ஹவுஸ் வில்லேஜ் உட்பட பல்வேறு இடங்களில் இந்த துப்பு தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டது.

செல்ஃபிக்கள்;

செல்ஃபிக்கள்;

பல இடங்களில் தேடிய பின்னர், இறுதியில் ‘தி ஃபெண்டாஸ்டிகோ ஹண்ட் - The #Fantastico Hunt' நிகழ்ச்சி பங்கேற்றவர்கள், அவர்கள் தேடி வந்த எழுத்துகளை கண்டுபிடித்தனர்.

எழுத்துகளை வெற்றிகரமாக கண்டுபிடித்தவர்கள், பின்புலத்தில் அந்த ஜொலிக்கும் எழுத்துகளுடன் நின்று புகைப்படங்கள் எடுத்து கொண்டனர்.

ஆன்லைன் பரபரப்பு;

ஆன்லைன் பரபரப்பு;

களத்தில் இந்த துப்புகளை கண்டுபிடிக்க இருந்த கள பரபரப்பு ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ‘தி ஃபெண்டாஸ்டிகோ ஹண்ட் - The #Fantastico Hunt' தொடர்பாக ஆன்லைனில் மக்கள் ஈடுபட்டிருந்தனர்.

ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் மூலமும் மக்கள் இந்த பிரச்சார நடவடிக்கைகளை மிக ஆர்வமாக பின்பற்றி வந்தனர், தற்போது பின்பற்றி வருகின்றனர்.

#madeofgreat பிராண்ட் பக்கம் மூலம் இந்த பிரச்சாரத்தில் நேரத்தோடு பங்கேற்றவர்கள், கவரும் வகையிலான பரிசுகளையும் வென்றனர்.

ஸீக்காவிற்கான பெயர் காரணம்;

ஸீக்காவிற்கான பெயர் காரணம்;

ஃஜிப்பி கார் (‘ZI'ppy ‘CA'r) என்ற இரு ஆங்கில சொற்களின் முதல் 2 எழுத்துகளை கொண்டு, இந்த கார் டாடா ஸீக்கா என்று பெயரிடபட்டுள்ளது.

லியோனல் மெஸ்ஸியுடன் கூட்டனி;

லியோனல் மெஸ்ஸியுடன் கூட்டனி;

டாடா மோட்டார்ஸ் மற்றும் லியோனல் மெஸ்ஸிக்கும் இடையே உருவான #madeofgreat என்ற கூட்டணியில், வெளியிடபடும் முதல் மாடல் ஸீக்கா கார் தான்.

லியோனல் மெஸ்ஸி தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் குளோபல் அம்பாஸிடராக உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

பிரச்சார முடிவுகள்;

பிரச்சார முடிவுகள்;

#Fantastico;

150 மில்லியன் இம்ப்ரெஷன்கள் (பதிவுகள்)

45,469 மென்ஷன்கள் (குறிப்பிடல்கள்)

#madeofgreat டுவிட்டர் ஹேண்டல்

117 மில்லியன் இம்ப்ரெஷன்கள் (பதிவுகள்)

14,979 மென்ஷன்கள் (குறிப்பிடல்கள்)

எங்கேஜ்மண்ட் ரேட் (-ஈடுபாடு விகிதம்) - 1.7%

பெறபட்ட ரீட்வீட்கள் - 986

டாடா மோட்டார்ஸ் கருத்து;

டாடா மோட்டார்ஸ் கருத்து;

இந்த ஸீக்கா தொடர்பான பிரச்சார நடவடிக்கைகள் மிக வெற்றிகரமாக நடந்ததை குறித்து, டாடா மோட்டார்ஸ் நிறுவன உயர் அதிகாரி டெல்னா அவாரி மிகுந்த பெருமிதம் வெளிபடுத்தினார்.

டாடா மோட்டார்ஸ் மற்றும் சர்வதேச கால்பந்து விளையாட்டு ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி இடையே ஏற்பட்டுள்ள இந்த #madeofgreat கூட்டணி,

பரிமாற்றங்களை கடந்து அடுத்த நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என டெல்னா அவாரி தெரிவித்தார்.

‘இட்ஸ் ஃபெண்டாஸ்டிகோ-"It's #Fantastico!"' என்ற தீம், அனைவரையும் எல்லைகள் கடந்து யோசிக்க வைக்கிறது என அவாரி கூறினார்.

விஸ்கிராஃப்ட் கருத்து;

விஸ்கிராஃப்ட் கருத்து;

#madeofgreat கூட்டணியால், ‘தி ஃபெண்டாஸ்டிகோ ஹண்ட் - The #Fantastico Hunt' என்ற பெயரில் நடத்தபட்ட இந்த பிரச்சாரம், மற்றொரு புதுமையான நடவடிக்கையாகும் என விஸ்கிராஃப்ட் நிறுவனத்தின் உயர் அதிகாரி சந்தீப் மேஹ்தா தெரிவித்தார்.

இந்த ‘தி ஃபெண்டாஸ்டிகோ ஹண்ட் - The #Fantastico Hunt' பிரச்சாரத்திற்காக கள அளவிலும், ஆன்லைனிலும் பல்வேறு மக்கள், மிகுந்த ஈடுபாட்டுடன் பங்கேற்றனர்.

ஸீக்காவின் அறிமுகம்;

ஸீக்காவின் அறிமுகம்;

‘தி ஃபெண்டாஸ்டிகோ ஹண்ட் - The #Fantastico Hunt' மூலமாக, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பின் பெயர் வெளியிடபட்ட நிலையில், இந்த ஸீக்கா எப்போது அறிமுகம் செய்யபட உள்ளது என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

Most Read Articles
English summary
‘The #Fantastico Hunt’ Campaign was held successfully and name of next product from Tata was revealed. The next car from Tata Motors is named as Tata Zica, which is based on "It's #Fantastico!" theme. Fans and enthusiasts from 4 cities (Mumbai, Delhi, Bengaluru and Kolkata) participated in this campaign and revealed the name through online and on-ground clue hunt.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X