டிரைவ்ஸ்பார்க் கேமராவில் சிக்கிய டாடா மல்டி ஆக்ஸில் சொகுசு பஸ்!

Written By:

வால்வோ மல்டி ஆக்ஸில் பஸ்களுக்கு போட்டியாக புதிய மல்டி ஆக்ஸில் சொகுசு பேருந்தை டாடா மோட்டார்ஸ் தீவிரமாக சோதனை செய்து வருகிறது.

பெங்களூரில் சோதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்த இந்த பஸ்சை எமது தளத்தின் புகைப்பட நிபுணர் ராஜ்கமல் படம் பிடித்துள்ளார். இந்த பஸ்சின் ஸ்பை படங்களையும், பஸ்சின் விசேஷ அம்சங்களையும் ஸ்லைடரில் காணலாம்.

பஸ் மாடல்

பஸ் மாடல்

கடந்த 2012ம் ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த, அதே டாடா பேரடைஸோ ஜி7 என்ற மல்டி ஆக்ஸில் சொகுசு பஸ் மாடல்தான் தற்போது தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது.

கூட்டுத் தயாரிப்பு

கூட்டுத் தயாரிப்பு

டாடா மோட்டார்ஸ் மற்றும் அதன் கூட்டணி நிறுவனமான பிரேசிலை சேர்ந்த மார்கோபோலோ ஆகிய நிறுவனங்கள் சேர்ந்து இந்த புதிய மல்டி ஆக்ஸில் பஸ்சை கூட்டாக தயாரித்துள்ளன.

சாலை சோதனை

சாலை சோதனை

டாடா பேரடைஸோ ஜி7 மல்டி ஆக்ஸில் பஸ் தினசரி 1,000 கிலோமீட்டர் தூரம் வரை வைத்து தீவிரமாக சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

வசதிகள்

வசதிகள்

சொகுசான இருக்கைகள், எல்இடி கேபின் விளக்குகள், தனித்தனி ஏசி வென்ட்டுகள், வெளிக்காற்றை சுத்திகரித்து உள் அனுப்பும் வசதி, ஹெட்போன்கள், நான்கு எல்சிடி டிவி போன்றவை நிரந்தர ஆக்சஸெரீகளாக இருக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த மல்டி ஆக்ஸில் பஸ்சில் கம்மின்ஸ் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 380 பிஎஸ் பவரை இந்த எஞ்சின் வெளிப்படுத்தும்.

அறிமுகம்

அறிமுகம்

அடுத்த ஆண்டு இந்த புதிய டாடா மல்டி ஆக்ஸில் சொகுசு பஸ் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

வால்வோ 9400எக்ஸ்எல், ஸ்கானியா மெட்ரோலிங்க் ஆகிய மல்டி ஆக்ஸில் பஸ்களுடன் இந்த புதிய டாடா மல்டி ஆக்ஸில் சொகுசு பஸ் போட்டி போடும்.

முக்கியச் செய்திகள்

முக்கியச் செய்திகள்

எமது ஃபேஸ்புக் பக்கத்தில் இரவு 8.30 மணிக்கு இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பை படிக்க தவறாதீர்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் ஃபேஸ்புக் பக்கம்

 
English summary
Tata multi-axle bus spotted in Bangalore.
Story first published: Thursday, December 3, 2015, 11:33 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos