ஏஎம்டி கியர்பாக்ஸுடன் புதிய டாடா நானோ ஜென்எக்ஸ் கார் விற்பனைக்கு வந்தது - முழு விபரம்

Written By:

கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய டாடா நானோ ஜென்எக்ஸ் கார் மாடல் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடலிலும் வந்திருப்பதால், உலகின் மிக குறைவான விலை கொண்ட ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலாக நானோ கூறப்படுகிறது.

தவிரவும், டிசைனில் சிறிய மாற்றங்கள் மற்றும் கூடுதல் வசதிகளுடன் இந்த புதிய நானோ கார் மாடல் வந்துள்ளது. முழுமையானத் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

பின்புறத்தில் கதவு

பின்புறத்தில் கதவு

முதல்முறையாக நானோ காரில் பின்புறத்தில் திறந்து மூடும் வசதி கொண்ட கதவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால், பொருட்களை வைத்து எடுப்பதற்கு ஏதுவாக மாறியிருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

பழைய மாடலில் இருந்த அதே எஞ்சின்தான் புதிய மாடலிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. நானோ காரில் இருக்கும் 624சிசி ட்வின் சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 38.19 பிஎஸ் பவரையும், 51 என்எம் டார்க்கையும் வழங்கும்.

கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள்

கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள்

புதிய டாடா நானோ கார் 4 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 5 ஸ்பீடு ஆட்டோமேட்டட் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கும். இதில், ஆட்டோமேட்டட் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடல் க்ளட்ச் பெடல் இருக்காது என்பதால், ஒரு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட காரை ஓட்டும் அனுபவத்தை பெறலாம். நானோ காரின் ஏஎம்டி கியர்பாக்ஸை ஈஸிஷிப்ட் என்ற பெயரில் குறிப்பிடுகிறது டாடா மோட்டார்ஸ்.

மைலேஜ்

மைலேஜ்

புதிய டாடா நானோ காரின் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடல் லிட்டருக்கு 25.4 கிமீ மைலேஜையும், ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 21.9 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் டேங்க்

பெட்ரோல் டேங்க்

புதிய டாடா நானோ காரில் அதிக கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் இருக்கிறது. இப்போது டாடா நானோ காரில் 24 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் இருக்கிறது.

முக்கிய வசதிகள்

முக்கிய வசதிகள்

புதிய ஸ்டீயரிங் வீல்

புளுடூத், யுஎஸ்பி மற்றும் 4 ஸ்பீக்கர்கள் கொண்ட மியூசிக் சிஸ்டம்

முன்புறத்தில் பவர் விண்டோஸ்

சார்ஜிங் பாயிண்ட்

சராசரி எரிபொருள் அளவீட்டு மானி

கியர் இண்டிகேட்டர்

புதிய டாடா நானோ விலை விபரம்

புதிய டாடா நானோ விலை விபரம்

மேனுவல் கியர்பாக்ஸ் மாடல்கள்

எக்ஸ்இ- ரூ.1.99 லட்சம்

எக்ஸ்எம்: ரூ.2.29 லட்சம்

எக்ஸ்டி: ரூ. 2.49 லட்சம்

ஏஎம்டி மாடல்கள்

எக்ஸ்எம்ஏ: ரூ.2.69 லட்சம்

எக்ஸ்டிஏ: ரூ.2.89 லட்சம்

அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையை அடிப்படையாகக் கொண்டது.

 

English summary
Tata Motors has launched the Tata Nano GenX in India today. This will be the world's most affordable AMT for sale in the mark
Story first published: Tuesday, May 19, 2015, 13:19 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark