ஃப்ரெஷ் தோற்றத்தில் கூடுதல் வசதிகளுடன் வருகிறது புதிய டாடா நானோ ஜென்எக்ஸ்!

Written By:

கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட புதிய டாடா நானோ கார் விரைவில் விற்பனைக்கு வருகிறது.

டாடா நானோ ஜென்எக்ஸ் என்று அழைக்கப்படும் இந்த புதிய கார் மாடலின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. புதிய டாடா நானோ ஜென்எக்ஸ் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை ஸ்லைடரில் காணலாம்.

டிசைன்

டிசைன்

முகப்பு பம்பர் மற்றும் ஹெட்லைட் டிசைனில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. இதுதவிர, பின்புறத்தில் பூட்ரூமில் பொருட்களை எளிதாக வைத்து எடுப்பதற்காக, திறந்து மூடும் வசதி கொண்ட டெயில் கேட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஏஎம்டி மாடல்

ஏஎம்டி மாடல்

புதிய டாடா நானோ ஜென்எக்ஸ் கார் கிளட்ச் தொல்லையில்லா ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடலிலும் வருகிறது. இதுவே இந்த கார் மீதான எதிர்பார்ப்பு அதிகரிப்பதற்கு முக்கிய காரணம். நானோ காரின் ஏஎம்டி மாடலை ஈஸி ஷிப்ட் என்ற பெயரில் பிரபலப்படுத்த உள்ளது டாடா மோட்டார்ஸ்.

மைலேஜ்

மைலேஜ்

டாடா நானோ ஜென்எக்ஸ் ஏஎம்டி மாடல் லிட்டருக்கு 21.9 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேங்க் கொள்ளளவு அதிகரிப்பு

டேங்க் கொள்ளளவு அதிகரிப்பு

முன்பு டாடா நானோ காரில் 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்கிற்கு பதிலாக தற்போது 24 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் கொண்டதாக வருகிறது.

வேரியண்ட்டுகள்

வேரியண்ட்டுகள்

டாடா நானோ ஜென்எக்ஸ் காரின் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் எக்ஸ்இ, எக்ஸ்எம் மற்றும் எக்ஸ்டி ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் டாடா நானோ ஜென்எக்ஸ் மாடல் வர இருக்கிறது. அதேநேரத்தில், ஏஎம்டி மாடல் எக்ஸ்எம் மற்றும் எக்ஸ்டி ஆகிய இரு வேரியண்ட்டுகளில் வருகிறது.

வண்ணங்கள்

வண்ணங்கள்

புதிய சாங்ரியா ரெட் என்ற சிவப்பு வண்ணம் புதிய நானோ காரில் சேர்க்கப்படுகிறது. இதுதவிர, சில்வர், வெள்ளை, தங்க நிறம், நீல நிறம், இளஞ்சிவப்பு மற்றும் ஊதா வண்ணங்களில் கிடைக்கும்.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

புதிய டாடா நானோ காரின் மேனுவல் மாடலைவிட, ஏஎம்டி மாடலுக்குத்தான் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. ரூ.2.75 லட்சம் ஆரம்ப விலையில் புதிய டாடா நானோ ஜென்எக்ஸ் ஏஎம்டி மாடல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
English summary
Tata Motors will be launching its all new Nano GenX model in India soon. This new model by the Indian manufacturer will become their new flagship in Nano range.
Story first published: Saturday, April 25, 2015, 10:45 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark