டாடா நானோ ஜென்எக்ஸ் மாடலுக்கு 'ஜென்ட்ஸ்' லுக் தரும் ஆக்சஸெரீகள்!

Written By:

சில தினங்களுக்கு முன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய டாடா நானோ ஜென்எக்ஸ் காருக்கு ஏராளமான கூடுதல் ஆக்சஸெரீகளை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது.

டாடா நானோ காருக்கு கவர்ச்சியை கூட்டும் விதத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும், அந்த அலங்கார ஆக்சஸெரீகள் விபரத்தையும், அதன் விலையும் ஸ்லைடரில் படங்களுடன் காணலாம்.

அலங்காரம்

அலங்காரம்

அலங்கார ஆக்சஸெரீகள் பொருத்தப்பட்டிருக்கும் புதிய டாடா நானோ ஜென்எக்ஸ் கார் படத்தில் உள்ளது. இந்த பிரத்யேக ஆக்சஸெரீகள் மூலம் நானோ ஜென்எக்ஸ் காரின் கவர்ச்சி அதிகரிப்பதை காணலாம். ஆக்சஸெரீகள் மற்றும் விலை விபரங்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

பாடி கிட்

பாடி கிட்

புதிய டாடா நானோ ஜென்எக்ஸ் காருக்கு பிரத்யேக பாடி கிட்டை டாடா மோட்டார்ஸ் வழங்குகிறது. காரின் தோற்றத்தை ஸ்போர்ட்டியாக காட்டும் வகையில், அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த ஆக்சஸெரீக்கு ரூ.19,900 விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

ரியர் ஸ்பாய்லர்

ரியர் ஸ்பாய்லர்

பின்புறத்தில் பொருத்தப்பட்டிருக்கும் ரியர் ஸ்பாய்லர் ரூ.5,695 விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மேலும், புதிய நானோ காருக்கு சன்ஃரூஃப் வழங்கப்படுகிறது. இதற்கு ரூ.15,775 விலையாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

 அலாய் வீல்

அலாய் வீல்

புதிய நானோ காருக்கு கருப்பு - சிவப்பு வண்ணத்திலான மல்டி ஸ்போக் அலாய் வீல்கள் அளிக்கப்படுகிறது. இந்த பிரத்யேகமான 4 வீல்கள் கொண்ட ஒரு செட்டுக்கு ரூ.12,000 விலையாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

பாடி டீக்கெல்

பாடி டீக்கெல்

பாடி டீக்கெல் எனப்படும் கூடுதல் அலங்கார ஸ்டிக்கருக்கு ரூ.1,850 விலையாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

 ரிமோட் சிஸ்டம்

ரிமோட் சிஸ்டம்

பூட் ரூம் கதவை ரிமோட் கன்ட்ரோல் மூலம் திறக்கும் வசதியும் கூடுதல் ஆக்சஸெரீயாக பெற்றுக் கொள்ளலாம். இதற்கு ரூ.2,700 விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

சீட் கவர்

சீட் கவர்

காரின் ஒரிஜினல் இருக்கை பாதிக்கப்படாதவகையில், கூடுதலாக போட்டுக்கொள்ளக்கூடிய சீட் கவருக்கு ரூ.5,400 விலையாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

 நேவிகேஷன் சிஸ்டம்

நேவிகேஷன் சிஸ்டம்

டாடா நானோ ஜென்எக்ஸ் காருக்கு போர்ட்டபிள் நேவிகேஷன் சாதனத்தை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம். இந்த ஆக்சஸெரீக்கு ரூ.9,500 விலையாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

 
English summary
Tata launched its Nano GenX in India on 19th May, 2015. The Indian manufacturer also launched an extensive accessory list, along with the launch of its Nano GenX. Here is a quick a look at the fully accessorised Nano GenX and pricing for individual parts as well.
Story first published: Saturday, May 23, 2015, 15:00 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark